தினமும் 100 ரூபாய் சேமித்தால் 2 லட்சம் ஈசியா சேர்க்கலாம்! இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யுங்க!

First Published | Nov 13, 2024, 10:58 AM IST

தினமும் 100 ரூபாய் சேமித்து போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டத்தில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியை உருவாக்கலாம்.

Post Office Recurring Deposit Scheme

அதிக ரிஸ்க் இல்லாமல் கணிசமான நிதியை உருவாக்க விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் உங்களுக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும். சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான நிதியை உருவாக்கும் வழியை வழங்குகிறது.

Post Office Scheme

போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் அனைத்து வருமான நிலைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் நிதியை உருவாக்க, மாதந்தோறும் ரூ.3,000 முதலீடு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 100 வீதம் சேமித்து மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்.

Tap to resize

Recurring Deposit

மாதம் ரூ.3000 வீதம் RD கணக்கில் டெபாசிட் செய்தால் ஐந்தாண்டு காலத்தில், மொத்த முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும். இதற்கு 6.7% வட்டி விகிதம் கிடைக்கும். இதன் மூலம் 5 ஆண்டுகள் கழித்து முதிர்வுத் தொகையாக ரூ.2,14,097 பெறலாம். இதில் வட்டி மட்டும் ரூ. 34,097.

Post Office RD Scheme

முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே வட்டி விகிதத்தில் RD கணக்கைமேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.  ரெக்கரிங் டெபாசிட் கணக்கை முன்கூட்டியே மூட விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு RD கணக்கை மூடலாம். ஆனால் அவ்வாறு செய்வதால் வட்டி விகிதம் சேமிப்புக் கணக்குக்கான வட்டி (4%) அளவுக்குக் குறைக்கப்படும்.

Recurring Deposit Scheme

இந்தத் திட்டத்தில் 12 மாதம் டெபாசிட் செய்தவுடன், RD கணக்கில் உள்ள தொகையில் 50% வரை கடனாகப் பெறலாம். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் RD வட்டி விகிதத்தை விட 2% அதிகம்.

Post Office RD Interest Rate

சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சேமிக்க விரும்புவோருக்கு தபால் அலுவலக RD திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இது நீங்கள் சேமித்த பணம் சீராக அதிகரிப்பதற்கு ஏற்ற ஆபத்து இல்லாத வழியாகும்.

Latest Videos

click me!