தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நாளு தோறும் தங்க நகைக்கடையில் கூட்டம் அலை மோதி வருகிறது. தங்கத்தின் விலை உச்சத்தில் சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இதற்கு காரணம் என்னவென்றால் தங்களது குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்கு தங்கம் ஒரு முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே மக்கள் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்தால் அவரச தேவைக்கு பணமாக திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்ற காரணத்திற்காகவும், தங்களது குழந்தைகளின் படிப்பு, திருமணத்திற்கும் சேமிப்பாகவும் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. குறிப்பாக கடந்த ஆக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் ஒரு சவரன் தங்கம் 59,640 ரூபாய் என்ற அதிகப்பட்ச உச்சத்தை பதிவு செய்தது. இந்த விலை உயர்வானது இன்னும் அதிகரிக்கும் என கூறப்பட்டது.
இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்கவே முடியாத என பரிதவித்து வந்தனர். ஆனால் அடுத்த 10 நாட்களில் தங்கத்தின் விலையானது சரசரவென குறைந்து வந்துள்ளது. கடந்த தீபாவளி தினத்தில் ஒரு சவரன் 59,640 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று ஒரு சவரன் 56,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 10 நாட்களில் 3280 ரூபாய் தங்கத்திற்கு குறைந்துள்ளது.
அந்த வகையில் நேற்று 7085 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 7045 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கமானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சவரன் அதாவது எட்டு கிராம் கொண்ட தங்கத்தின் விலை ஆனது 320 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று 56 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கமானது இன்று 56 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது