பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் விளங்குகிறது. நீங்கள் முதல் முறையாக முதலீடு செய்ய நினைத்தாலும், ஏற்கனவே முதலீடு செய்து வருபவராக இருந்தாலும், தங்கத்தை போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்தியாவில் முதலீடு பற்றி பலரும் பேசும் போது, முதலில் நினைவுக்கு வருவது தங்கம் தான். காரணம், தங்கம் வெறும் அலங்கார பொருள் அல்ல. அது ஒரு நம்பகமான சேமிப்பு சொத்து. பணவீக்கம் அதிகரிக்கும் காலம், ஷேர் மார்க்கெட் ஏற்ற இறக்கம், உலக அரசியல் நிச்சயமின்மை போன்ற சூழல்களில் தங்க முதலீடு ஒரு பாதுகாப்பு குடை போல செயல்படுகிறது. நீங்கள் முதல் முறையாக முதலீடு செய்ய நினைத்தாலும், ஏற்கனவே முதலீடு செய்து வருபவராக இருந்தாலும், தங்கத்தை போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வது நல்ல முடிவாக இருக்கலாம்.
25
பணவீக்கம்
தங்கத்தின் முதல் பெரிய பலன் பணவீக்கத்தை எதிர்க்கும் சக்தி. விலைவாசி உயரும்போது காசின் மதிப்பு குறையலாம். ஆனால் தங்கம் நீண்ட காலத்தில் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் சேமிப்பை வாங்கும் திறன் பாதுகாப்பாக இருக்கும். மேலும் காலத்துக்கு காலம் தங்கத்தின் விலை உயர்வது, நீண்டகாலத்தில் செல்வத்தை வளர்க்க உதவுகிறது. அடுத்ததாக போர்ட் ஃபோலியோ சமநிலை. பொதுவாக ஷேர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் சரிவு வந்தால் தங்கம் நிலைத்திருக்கும் அல்லது உயரக்கூடும்.
35
தங்கம் பாதுகாப்பு
அதனால் தங்கம் உங்கள் முதலீட்டின் ரிஸ்கை குறைக்கும் ஒரு “பேலன்சிங் பிளேயர்” ஆக இருக்கும். மேலும் தங்கம் அதிக லிக்விடிட்டி கொண்டது. தேவைப்பட்டால் வங்கி, நகைக் கடை அல்லது ஆன்லைன் தளங்கள் மூலம் விரைவில் பணமாக மாற்ற முடியும். சிக்கலான காலங்களில் தங்கத்தை “Safe Haven Asset” என்று அழைப்பார்கள். பொருளாதார சிக்கல், போர் பதற்றம், உலக சந்தை குழப்பம் போன்ற நேரங்களில் பலர் தங்கத்தை நாடுவார்கள். முக்கியமாக இன்றைய காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன.
நாணயங்கள்/பிஸ்கட்/நகை போன்ற பிஸிக்கல் தங்கம் தவிர, டிஜிட்டல் தங்கம், தங்க ஈடிஎஃப், தங்க மியூச்சுவல் ஃபண்ட், இறையாண்மை தங்கப் பத்திரம் (SGB) என விருப்பப்படி தேர்வு செய்யலாம். இதில் SGB-க்கு தனி சிறப்பு உண்டு. இது அரசு வெளியிடும் தங்க முதலீடு என்பதால் பாதுகாப்பு அதிகம். அதோடு விலை உயர்வோடு சேர்த்து சில நேரங்களில் வட்டியும் கிடைக்கும். சில வரி சலுகைகள் இருப்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஈர்க்கும் வாய்ப்பாக இருக்கும்.
55
தங்க விலை உயர்வு காரணம்
தங்கத்தை பாதுகாப்பாக வாங்க வேண்டுமென்றால் சில நம்பகமான இடங்கள் உள்ளன. வங்கிகள் மூலம் சான்றிதழுடன் தங்க நாணயம் வாங்கலாம். அல்லது BIS ஹால் மார்க் உள்ள தங்கத்தை பிரபல நகைக் கடைகளில் வாங்குவது பாதுகாப்பு. குறைந்த தொகையிலேயே தொடங்க விரும்புபவர்கள் Digital Gold apps மூலம் வாங்கி சேமிக்கலாம். “பேப்பர் கோல்டு” விரும்பினால் கோல்ட் ஈடிஎஃப் / மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்யலாம். மேலும் மிக பாதுகாப்பான முறையாக RBI மூலம் வரும் SGB திட்டங்களையும் கவனிக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.