இந்திய ரயில்வே சட்டப்படி, ரயிலில் மது எடுத்துச் செல்வது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இதுகுறித்த முழு விபரங்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
ரயிலில் பயணம் செய்யும்போது பயணிகளின் பாதுகாப்பு, ஒழுங்கு, நிம்மதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே சில முக்கிய விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் மது (ஆல்கஹால்) தொடர்பான விதிகள் பலருக்கும் குழப்பமாக இருக்கும். ரயிலில் மதுபாட்டில் எடுத்துச் செல்லலாமா?, எடுத்துச் சென்றால் சட்ட சிக்கல் வருமா? என்பதே பொதுவான கேள்வி. இந்திய ரயில்வே சட்டம் (ரயில்வே சட்டம் – 1989) படி, ரயிலில் மது எடுத்துச் செல்ல முழுமையான தடை இல்லை. ஆனால் எந்த மாநிலத்தில் பயணம் செய்கிறோம் என்பது பொறுத்து சில விதிகள் மாறும்.
24
ரயிலில் மதுவை எடுத்துச் செல்லலாமா?
முக்கியமாக, சில மாநிலங்களில் மதுவுக்கு தடை இருப்பதால் அங்கு அல்லது அந்த வழியாக ரயிலில் மது எடுத்துச் செல்வது குற்றமாக கருதப்படலாம். உதாரணமாக குஜராத், பீகார், நாகாலாந்து, லட்சத்தீவு போன்ற பகுதிகளில் மது தடை விதிகள் கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. அந்த மாநிலங்களுக்குள் செல்லும் ரயிலில் மது வைத்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால், அந்தந்த மாநிலத்தின் மதுவிலக்கு/எக்சைஸ் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
34
இந்திய ரயில்களில் மது அனுமதிக்கப்படுகிறது
மதுவை எடுத்துச் செல்ல அனுமதி இருக்கும் மாநிலங்களில் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே குறைந்த அளவு எடுத்துச் செல்ல வேண்டும். பலருக்குத் தெரிந்த முக்கிய விதிகள்: அதிகபட்சமாக 2 லிட்டர் வரை மட்டுமே அனுமதி, பாட்டில் முழுக்க சீல் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், திறந்த பாட்டில் அல்லது காலி பாட்டில் கூட வைத்துச் செல்லக் கூடாது. இந்த விதிகளை பின்பற்றினால் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க முடியாது.
அதோடு, ரயிலில் பயணம் செய்யும்போது அல்லது பிளாட்ஃபார்மில் கூட மது அருந்துவது முற்றிலும் தடை. இது மற்ற பயணிகளுக்கு இடையூறு மற்றும் பாதுகாப்பு பிரச்சினை உருவாக்கலாம். விதிகளை மீறினால் ரயில்வே காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும். சில நேரங்களில் அபராதம் மட்டுமல்ல சிறைத் தண்டனை வரை வாய்ப்பு உள்ளது. பொதுவாக விதிமீறினால் 6 மாதம் வரை சிறை மற்றும் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.