கவுதம் அதானிக்கு சவால் விடும் ஹிண்டன்பர்க் நிறுவனம்; யார் இதன் உரிமையாளர்?

First Published Jan 28, 2023, 1:16 PM IST

ஹிண்டன்பர்க் ரிசர்ச் புதன்கிழமையன்று அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக  செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தடாலடியாக சரிந்தது. 

இது அதானி குழுமத்தில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டார்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்டு இருந்த அறிக்கையில், அதானி குழுமம் பங்கு மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வரி செலுத்த தேவையில்லாத நாடுகளில் நிறுவனங்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து இருந்தது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தவறுகளை கண்டறிந்து, அந்த நிறுவங்கள் விடுக்கும் சவால்களையும் சந்திப்பதில் ஹிண்டன்பர்க் நிறுவனம் திறன் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம்தான் தற்போது அதானி குழுமத்துக்கும் சவால் விடுத்துள்ளது. 

இந்த நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மட்டும் அதானி குழும நிறுவனங்களின் மதிப்பு சுமார் 2.3 லட்சம் கோடி சரிந்து அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சரிந்தது. இது மட்டுமின்றி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.  

ஃபோர்ப்ஸ் ரியல் டைம்ஸ் பில்லியனர் குறியீட்டின்படி, அதானியின் சொத்து மதிப்பு 22.5 பில்லியன் டாலர்கள் குறைந்து 96.8 பில்லியன் டாலராக இருந்தது. அதானி இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை விட சொத்து மதிப்பில் சரிந்துள்ளார். பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 104.1 பில்லியன் டாலராக உள்ளது. கடந்தாண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு பெரிய அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். இந்த நிலையில்தான் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது.

நாதன் ஆண்டர்சனால் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஹிண்டன்பர்க் ரிசர்ச். தடவியல் நிதி ஆய்வு நிறுவனமான இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளின் நிறுவன பங்குகள், கடன் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகிறது. 1937ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியில் விமான விபத்து ஒன்று நடந்தது. இதில் 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருந்துதான் ஹிண்டன்பர்க் என்ற பெயரை ஆண்டர்சன் தேர்வு செய்தார். இவர் கனெக்டிகட் பல்கலைக்கழத்தில் இன்டர்நேஷனல் பிஸ்னஸ் என்ற பாடத்தில் டிகிரி பெற்றார். துவக்கத்தில் hedge funds மற்றும் முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தார்.  

இதுவரை இந்த நிறுவனம் 16 நிறுவனங்களை ஆய்வு செய்துள்ளது. இவரிடம் 10 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் முன்னாள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள். இவர்கள்தான் தற்போது அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் இணையதளத்தில், அதானி குழுமம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவலில்,  கணக்கு முறைகேடுகள், தவறான நிர்வாகம் போன்ற "மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை" கண்டறிந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அதாவது, பங்குச் சந்தையில் விரைவில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. அவை short position, Long Position என்பதாகும். இதில் பங்குகளின் விலை குறையும் என்று பிட்டிங் செய்வது. அப்படி குறைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். Long Position என்பது பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும் என்று பிட்டிங் செய்வது. பங்குகள் விலை உயர்ந்தால்தான், லாபம் கிடைக்கும். பொதுவாக கார்பரேட் நிறுவனங்கள் Short position வர்த்தகத்தில் இறங்குவதில்லை. 

இதே பங்குச் சந்தை வர்த்தகத்தில்தான் ஹிண்டன்பர்க் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இதில் சிறந்து விளங்குகிறது. இதன் அடிப்படையில்தான் Short position பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கும் அதானி குழுமத்தின் மோசடிகள் எளிதில் கண்டறிய முடிந்ததாக செய்திகள் கூறுகின்றன. அதானி குழுமத்தின் இழப்பு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் லாபமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 

Gautam Adani cyrus mistry

Gautam Adani இந்திய பங்குச் சந்தை முறைகேடுகளை ஆய்வு செய்து வரும் செபி தற்போது அதானி குழுமம் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மீதான ஆய்வுகளை துரிதப்படுத்தியுள்ளது. 

click me!