Photo Gallery: Budget2023:பட்ஜெட் 2023: வருமானவரி உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன

First Published Jan 21, 2023, 12:22 PM IST

பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாதம் வருமானம் பெறுவோருக்கு, வருமானவரி செலுத்தும் உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது.

மாத ஊதியம் பெறுவோர் எதிர்பார்ப்பு

2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் சமானிய மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர், மாத ஊதியம் பெறுவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமானவரி உச்ச வரம்பு விலக்கை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகளாக மாற்றமில்லை

வருமானவரி உச்ச வரம்பு கடந்த 5 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உச்சவரம்பு உயர்த்தப்படுமா எனப் பார்த்து மாத ஊதியம் பெறுவோர் ஏமாற்றம் அடைகிறார்கள். தற்பதுள்ள நிலையில் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம்வரை வரியில்லை.ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரை 5 சதவீதம் வரி. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை 10 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது

30 சதவீதம் வரி யாருக்கு

வருமானவரி 30 சதவீதம் என்பது தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம்பெறுவோரில் இருந்து தொடங்குகிறது. இதை ரூ.20 லட்சம் ஆண்டு வருமானம் பெறுவோரிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

வருமானவரி குறித்த எதிர்பார்ப்புகள்

வரும் 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. இதன்படி ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5லட்சம்வரை 2.5 சதவீதமாக வரியைக் குறைக்கலாம். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 வரை 20% வரி, ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 25% வரி, ரூ.20 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி.

நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கருணை காட்டுவாரா

பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியெல்லாம் பட்ஜெட்டில் நடக்குமா

வரும் 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில், வருமானவரி உச்ச வரம்பு விலக்கில் கீழ்காணும் மாற்றங்கள் வரலாம். இதன்படி ரூ.5லட்சம்வரை வரியில்லை. ரூ.5 லட்சத்து 1 முதல் ரூ.7.50 லட்சம்வரை 7.5 சதவீதம், ரூ.7,50001 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 12.5% வரி, ரூ.10,0001 முதல் ரூ.12.50 லட்சம்வரை 17.50 சதவீதம் வரி. ரூ.12,50001 முதல் ரூ.15 லட்சம் வரை 22.5 சதவீதம் ,  ரூ.15,00001 முதல்ரூ.20 லட்சம் வரை 27.5% வரி, ரூ.20 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி.

அடிப்படை வருமானவரி விலக்கு உயருமா

வரும் பட்ஜெட்டில் அடிப்படை வருமானவரி உச்ச வரம்பு விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம்.புதிய வரிவிதிப்பு முறையின்படி, ஏற்கெனவே இருக்கும் வருமானவரி உச்ச வரம்பு விலக்குகள் மறு ஆய்வு செய்யப்படலாம்.

click me!