SBI Doorstep Service: 'நோ சார்ஜ்', அலைச்சல் இல்லை!வீ்ட்டுக்கே வரும் பணம்!எஸ்பிஐ வங்கிச் சேவை பற்றி தெரியுமா?

First Published | Jan 23, 2023, 5:13 PM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இதில் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எந்தவிதமான கட்டணமும் இன்றி, வீட்டுக்கே வந்து  பணத்தை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

3 இலவச சேவை

எஸ்பிஐ வங்கி  தங்களிடம் கணக்கு வைத்துள்ள மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வீட்டுக்கே வந்து பணம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள், முதியோர் மாதத்துக்கு 3 முறை கட்டணமின்றி செயல்படுத்தி வீட்டுக்கே பணத்தை வரவழைக்கலாம். மாதத்துக்கு 3 முறை இலவசமாகவும் 4வது முறை ரூ.75 கட்டணமும் ஜிஎஸ்டி வரியுடன் வசூலிக்கப்படுகிறது.

டோர்ஸ்டெப் பேங்க் அப்ளிகேஷன்

எஸ்பிஐ வங்கியின் டோர்ஸ்டெப் பேங்க் அப்ளிகேஷனை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் மாற்றுத்திறனாளி அல்லது முதியோர் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும், அதன்பின் வரும் ஓடிபி எண்ணைக் குறிப்பிட வேண்டும். இந்த செயல்முறை முடிந்தபின், வாடிக்கையாளர் பெயர், மின்அஞ்சல், பாஸ்வேர்ட் ஆகியவற்றை அளித்து உறுதி செய்யவேண்டும்

Tap to resize

பணத்தை எவ்வாறு பெறுவது

டோர்ஸ்டெப் செயலியில் லாகின் செய்ய வேண்டும். அதில் ஸ்பிஐ வங்கியைத் தேர்வு செய்து, உங்கள் வங்கிக்கணக்கின் கடைசி 6 எண்ணை டைப் செய்ய வேண்டும். அதன்பின் ஓடிபி எண் செல்போனுக்கு வரும். 

வீட்டுக்கே பணம் வரும்

செல்போனுக்கு ஓடிபி எண் வந்தபின், பெயர், வங்கியின் பெயர், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, எந்த விதமான சேவை தேவை என்பதைக் குறிப்பிட வேண்டும். பணப்பரிமாற்றம், பரிமாற்றம் தொகை அளவு ஆகியவற்றை குறிப்பிட்டு சப்மிட் செய்ய வேண்டும். இதற்கான கட்டண் வாடிக்கையாளர்கள் கணக்கில்இருந்து எடுக்கப்படும். 

ஏஜென்ட் விவரம்

அதன்பின் வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ ஏஜென்ட் விவரம் செல்போன் வழியாக பெயர், அடையாள எண், தெரிவிக்கப்படும்

அடையாள எண்

எஸ்பிஐ ஏஜென்ட் வீட்டுக்குவந்தபின், அவர் கூறும் அடையாள எண்ணும், வாடிக்கையாளர் வைத்திருக்கும் அடையாள எண்ணும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து பணத்தைப் பெறலாம். எஸ்பிஐ ஏஜென்டும் வாடிக்கையாளர் அடையாளம், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை உறுதி செய்து பணத்தை வழங்குவார்.

Latest Videos

click me!