இந்தியாவில் இன்று முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST 2.0) நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல பொருட்கள் மலிவாகவும், சில பொருட்கள் அதிக விலையிலும் கிடைக்கப் போகின்றன. செப்டம்பரில் GST கவுன்சில் ஒப்புதல் அளித்த இந்த மாற்றம் இன்று முதல் சந்தையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இனி இரண்டு வரி மட்டுமே
முந்தைய காலத்தில் 5%, 12%, 18%, 28% என பல ஜிஎஸ்டி வரிசைகள் இருந்தன. இது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் குழப்பமாக இருந்தது. இப்போது அரசு அதை எளிமையாக்கியுள்ளது. இனி இரண்டு வரி மட்டுமே – 5% மற்றும் 18%. அதேசமயம், புகை, மதுபானம், பான் மசாலா போன்ற ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% ‘சின் டாக்ஸ்’ விதிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.