விர்சுவல் கிரெடிட் கார்டு என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

Published : Mar 31, 2025, 12:17 PM ISTUpdated : Mar 31, 2025, 12:57 PM IST

Virtual credit card benefits: விர்சுவல் கிரெடிட் கார்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. 2025-ல் இதன் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால் கவனமாக செலவு செய்வது அவசியம்.

PREV
14
விர்சுவல் கிரெடிட் கார்டு என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
Virtual Credit Cards

ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும்போதும் ரிவார்டுகளைப் பெற விரும்பும் மக்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது விர்சுவல் கிரெடிட் கார்டுகள் (Virtual Credit Cards) டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான விருப்பத் தேவாக மாறி வருகிறது. அவை வழங்கும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.

24
Virtual credit card

பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங்: மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, தற்காலிக கார்டு விவரங்களை பயன்படுத்த முடியும் என்பதால் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு விர்சுவல் கிரெடிட் கார்டுகள் ஏற்றவை.

அதிக பொறுப்பான செலவு: பொறுப்பாகச் செலவு செய்யும் பழக்கத்துக்கா, செலவு மற்றும் பயன்பாட்டு வரம்புகளை நிர்ணயிக்கலாம். இதன் மூலம் உங்களிடம் அதிக பணம் இல்லாதபோது, செலவு செய்வதைக் கட்டுப்படுத்தலாம்.

வானிலை ஆய்வு மையத்துக்கு ரூ.226 கோடி வருவாய்! எப்படி வருது தெரியுமா?

34
Virtual credit card uses

காப்பீட்டு மோசடியில் இருந்து பாதுகாப்பு: பாதுகாப்பான மற்றும் விரைவான இன்சூரன்ஸ் பேமெண்ட்களுக்கு விர்சுவல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் காப்பீடு தொடர்பான மோசடிகளைத் தடுக்க முடியும்.

கட்டணங்கள் குறைவு: பல வங்கிகள் விர்சுவல் கிரெடிட் கார்டுகளை இலவசமாக வழங்குகின்றன. எனவே, உங்கள் பட்ஜெட்டில் இருந்து அதிக செலவு செய்யாமல் கிரெடிட் கார்டின் பயன்களைப் பெறலாம்.

சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கியில் வீட்டுக்கடன் கிடைக்குமா?

44
Virtual credit card advantages

மோசடி, தரவுத் திருட்டு ஆபத்து குறைவு: விர்சுவல் கிரெடிட் கார்டுகள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்துவமான கார்டு எண்களை உருவாக்குவதால், மோசடி மற்றும் தரவு திருட்டுக்கான அபாயத்தைக் குறைக்கின்றன.

தரவுக் கசிவு பாதுகாப்பு: தற்காலிகமான விவரங்கள் பயன்படுத்தப்படுவதால், ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் இருந்து பயனர்களின் தரவுகள் கசியும் வாய்ப்பும் குறைகிறது. மோசடி செய்பவர்கள் வணிக நிறுவனத்தின் டேட்டா பேஸை ஹேக் செய்து தகவல்களைத் திருடுவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

இஸ்ரோவில் வேலை செய்ய ஆசையா? பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories