Mukesh Ambani
இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய பணக்காரராக விளங்கி வருபவர் முகேஷ் அம்பானி. அவருடைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் ஒன்பது லட்சம் கோடி. அது மட்டுமல்ல முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 25.9 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி அமைக்க இந்த குடும்பம் எளிமையான சில வழிமுறைகள் தான் கையாளுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வெற்றியின் சீக்ரெட் குறித்து இப்போது நாமும் தெரிந்து கொள்ளலாம்.
முழுமையான தூக்கம்
ஆம்.. நீங்கள் வாழ்க்கையில் பல உயரங்களை தொட அடிப்படையாக இருப்பது தூக்கம். ஒரு சராசரி வளர்ந்த மனிதரை பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் அவர் அயர்ந்து தூங்க வேண்டும். நீங்கள் அயர்ந்து தூங்கினாலே உங்களுடைய மூளை முதல் உடல் உறுப்புகள் அனைத்தும் ரீ-ஸ்டார்ட் செய்யப்படுகிறது. உங்களுடைய அன்றைய பொழுது மிக மிக பயனுள்ளதாக மாற முதலில் உங்களுக்கு உதவுவது இந்த சரியான தூக்கம் தான்.
திருமணமான பெண்கள் வருமான வரியில் 7 லட்சம் வரை மிச்சப்படுத்த 3 வழிகள் இருக்கு!
Nita ambani and mukesh
உடலை சீராக்கும் உடற்பயிற்சி
உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவாகவும், முழுமையாகவும் செயல்பட முடியும் என்கிறார்கள் அறிஞர்கள். ஆகவே நல்ல ஒரு தூக்கம் தூங்கி எழுந்த பிறகு, முதலில் நாம் காலையில் செய்ய வேண்டியது அடிப்படை உடற்பயிற்சியை செய்யவேண்டும். அதிலும் குறிப்பாக அம்பானி குடும்பத்தை பொறுத்தவரை, இப்போது 60 வயதை நெருங்கும் நீதா அம்பானி, தினமும் காலை தன்னுடைய இயல்பான உடற்பயிற்சிகளை செய்யாமல் தனது நாளை துவங்குவது இல்லையாம். உடற்பயிற்சி என்பது மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உங்களுக்கு பெரிய அளவில் உதவும்.
Ambani Family
சமரசம் இல்லாத கற்றல்
இங்கு கற்றல் என்று வரும் பொழுது, அது உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான எந்த விதமான கல்வியாக வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தக வடிவில் தான் அந்த கல்வி இருக்க வேண்டும், பட்டங்கள் பெரும் கல்வியாக மட்டும் தான் அது இருக்க வேண்டும் என்பதல்ல. தினசரி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் தோல்விகள் ஏற்பட்டாலும் அந்த தோல்விகளில் இருந்து மீண்டு வரும் யுக்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே தினமும் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான ஏதோ ஒரு வகையான கல்வியை நீங்கள் கற்றுக் கொண்டே இருப்பது மிகவும் நல்லது.
nita Ambani
மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல்
நீங்கள் வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்கின்ற இலக்கை உங்களுக்குள் கொண்டு வந்துவிட்டால் அதற்கு முதலில் உங்கள் மனதை கட்டி ஆள்கின்ற திறன் உங்களுக்கு வேண்டும். எந்த ஒரு மனிதன் தனது மூளையையும், மனதையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் யுக்தியை தெரிந்து வைத்திருக்கிறானோ, அவனுக்கு தோல்வியே இல்லை என்று கூறுகின்றனர் அறிஞர்கள். தேவையற்ற நேரங்களில் நமது சிந்தனையையும் செயலையும் வீணடிக்காமல், நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக செலவிடுவது மிகவும் நல்லது. அந்த நேரங்களில் நமக்கு மன அழுத்தமே ஏற்பட்டாலும் அதை சரியான வகையில் கையாள தெரிந்திருந்தால் வெற்றி நிச்சயம்.
Mukesh Ambani
குடும்பமே மிகப்பெரிய சொத்து
நமது குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது என்பது இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலருக்கும் எட்டாத கனியாக மாறி இருக்கிறது. ஆனால் உண்மையில் நீங்கள் மிகப்பெரிய உயிரினங்களை தொட வேண்டுமென்றால் முதலில் உங்கள் குடும்பத்தாரோடு நீங்கள் சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை, பொறுப்பு, போன்ற பல விஷயங்களை உங்கள் குடும்பமே கற்றுக்கொடுக்கும். குடும்பத்தோடு அதிக அளவில் நேரத்தை செலவிட முடியவில்லை என்றாலும் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரமாவது நமது குடும்பத்துடன் இணைந்து அவர்களுடன் பேசி மகிழ்வது நமது முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் வழி வகுக்கும்.
ஜனவரியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!