ஜனவரியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

First Published | Sep 14, 2024, 3:49 PM IST

ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். புதிய அறிவிப்பின்படி, பண்டிகைக்கு முன்பே அரசு ஊழியர்களின் முகத்தில் புன்னகை மலர்ந்துள்ளது.

7th Pay Commission Update

ஓய்வுக்குப் பிறகு ஒரு ஊழியரின் ஒரே நம்பிக்கை ஓய்வூதியம்தான், அதன் மூலம் அவர் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தனது முதுமையை கழிக்க முடியும்.

7th Pay Commission

ஆனால் பல நேரங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்காததால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos


Central govt employees

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தாமதமாகும் பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கான மிக முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Da hike news

அரசின் இந்த நடவடிக்கையால் ஓய்வூதியதாரர்கள் எந்த தாமதமும் இன்றி சரியான நேரத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவார்கள்.

Dearness Allowance

இது தொடர்பாக நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் அனைத்து அதிகாரிகளும் CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் படி காலக்கெடுவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

da hike central government

CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் படி, ஓய்வூதியம் தொடர்பான விஷயங்களை சரியான நேரத்தில் முடிப்பது கட்டாயமாகும். இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சரியான நேரத்தில் ஓய்வூதியம் பெற முடியும்.

Govt employees

இதற்காக ஊழியர்கள் தங்கள் பணி பதிவேடுகளை சரிபார்த்து, ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே மற்ற ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pension

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வு தேதிக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணி பதிவேடுகள் மற்றும் பிற ஆயத்தப் பணிகளைச் சரிபார்க்கத் தொடங்கலாம்.

Modi Govt

அதே நேரத்தில், ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தேவையான ஆவணங்களை அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான விஷயங்களை 4 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதியக் கணக்கு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Salary Hike

ஓய்வூதியதாரர்களுக்கான செயல்முறையை எளிதாக்கும் வகையில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 9 வெவ்வேறு படிவங்களுக்குப் பதிலாக ஒரே ஒரு படிவம் 6A ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இது தவிர, ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை எளிதாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, எதிர்காலத்தில் E-HRMS உடன் ஒருங்கிணைப்பதையும் அறிவித்துள்ளனர்.

7th Pay Commission News

அரசு அறிமுகப்படுத்தியுள்ள படிவம் 6A, 2025 ஜனவரிக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு E-HRMS இல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

50 % தள்ளுபடி.. மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொல்லப்போகும் ரயில்வே.. என்ன தெரியுமா?

click me!