இந்த நாட்டில் ஜிஎஸ்டி பிரச்சனையே இல்லை.. அன்னபூர்ணா ஓனர் அங்கேயே பொறந்திருக்கலாம்..

First Published Sep 14, 2024, 1:18 PM IST

இந்த உலகில் பல நாடுகள் அதிக வரி விதிக்கும் போது, இந்த நாடு மட்டும் தனித்துவமாக எந்த வரியும் இல்லாமல் செயல்படுகிறது. அந்த நாட்டின் வளமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மூலம் சாத்தியமாகிறது. இது அரசாங்கத்திற்கு நிலையான வருவாய் ஆதாரத்தை வழங்குகிறது. இந்தியாவை போல ஜிஎஸ்டி வரி, வாட் வரி போன்றவை இந்த நாட்டில் கிடையாது.

No Tax Country

வரிவிதிப்பு உலகில், சில நாடுகள் தங்கள் அசாதாரணக் கொள்கைகளுக்காக தனித்து நிற்கின்றன. நம் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி கூட அடிக்கடி ட்ரெண்டிங் ஆவதுண்டு. தற்போது அன்னபூர்ணா ஓனர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையேயான ‘பன் பட்டர் ஜாம்’ சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. வரி இல்லாத நாடு ஒன்று உள்ளது. அது எந்த நாடு, எங்கு இருக்கிறது. ஏன் இந்த விதிமுறை மேற்கொள்ளப்படுகிறது என பலவற்றை காண்போம். குறிப்பிட்ட இந்த நாட்டில் வருமான வரி இல்லை. மதிப்புக் கூட்டப்பட்ட வரி மற்றும் ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி இல்லை. இது அரிதானது என்றாலும், பல நாடுகளில், குறிப்பாக அரபு மற்றும் கரீபியன் போன்றவற்றில் வருமான வரி அமைப்பு இல்லாமல் செயல்படுகின்றன.

Income Tax

சவூதி அரேபியா, யுனைடெட் அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் பஹாமாஸ் போன்ற நாடுகள் முக்கிய உதாரணங்களாக உள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட இந்த ஒரு நாடு எந்தவொரு வரியும் இல்லாமல் இருக்கிறது. அந்த நாடு வேறு எதுவும் இல்லை புருனே தான். புருனே நாட்டில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட முழுமையான வரி இல்லாத வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு நாடு ஆகும். வருமான வரி, வாட், சொத்து வரி மற்றும் ஜிஎஸ்டி போன்ற வரிகள் இல்லை. புருனேயில் வசிக்கும் எவரும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்துவதைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்யலாம், வணிகம் செய்யலாம் அல்லது பொருட்களை வாங்கலாம். இதன் மூலம் பல ஆண்டுகளாக குறைந்த வரிச்சுமை கொண்ட நாடுகளின் பட்டியலில் புருனே முதலிடத்தில் உள்ளது.  புருனேயின் பொருளாதார மாதிரி பெரும்பாலான நாடுகளில் இருந்து வேறுபட்டது. அதன் பொருளாதாரத்தின் அடித்தளம் அதன் வளமான இயற்கை வளங்கள், குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகும்.

Latest Videos


Brunei

இந்தத் துறைகள் நாட்டின் வருவாயில் பெரும்பகுதியை வழங்குகின்றன. அரசாங்கம் அதன் குடிமக்களிடமிருந்து வரி வசூலிக்கத் தேவையில்லாமல் செயல்பட அனுமதிக்கிறது. இயற்கை வளங்களின் இந்த செல்வம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கார்ப்பரேட்கள் மட்டுமே கார்ப்பரேட் வரிகளை செலுத்த வேண்டிய ஒரு நிலையான அமைப்பை உருவாக்க புருனேக்கு உதவி வருகிறது என்று சொல்லலாம். இந்த கார்ப்பரேட் வரிகள் நகராட்சி நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றது என்பது கூடுதல் தகவல் ஆகும். இந்த நகராட்சி அமைப்புகள் சொத்துக்கள் மற்றும் பிற சொத்துக்களை வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாயை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இந்த வரிச்சுமைகளை குடிமக்கள் மீது செலுத்த அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, பொது மக்கள் வரிக் கடமைகளிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்கிறார்கள். வருமான வரி இல்லாதது புருனேயில் மட்டும் இல்லை. உலகளவில் குறைந்தபட்சம் 17 நாடுகள் தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் செயல்படுகின்றன.

Brunei Country

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற அரபு லீக் நாடுகளும் பஹாமாஸ் போன்ற கரீபியன் நாடுகள் மற்றும் வனுவாடு போன்ற பசிபிக் நாடுகள் போன்றவையும் வருமான வரிக் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. . இருப்பினும், புருனேயை வேறுபடுத்துவது என்னவென்றால், அது வாட் அல்லது ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகளை விதிக்காது. இது உலகின் மிகவும் வரி இல்லாத சூழல்களில் ஒன்றாகும். நேரடி மற்றும் மறைமுக வரிகள் இல்லாவிட்டாலும், சமூக நலனை உறுதிப்படுத்த புருனேயில் கட்டாய அமைப்பு உள்ளது. அனைத்து தொழிலாளர்களும் தங்கள் சம்பளத்தில் 5% புருனே மத்திய பாதுகாப்பு நிதிக்க  பங்களிக்க வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஓய்வூதிய முறைக்கு இந்த நிதி அவசியம். இந்த 5% இல், 30% உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது, மீதமுள்ள 70% உலகளாவிய சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீடுகளின் வருமானம் நாட்டின் ஓய்வூதிய முறைக்கு நிதியளிக்க உதவுகிறது, அதன் குடிமக்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியத்தை வழங்குகிறது.

Tax System in India

மொத்தத் தொகை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கும் பிற நாடுகளைப் போலன்றி, புருனே நாடு தனது குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குகிறது. இது நீண்ட கால நிதி பாதுகாப்பை வழங்கும் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமான ஓட்டத்தை உறுதி செய்கிறது. புருனே ஒரு வரி இல்லாத நாடாக செழித்து வரும் அதே வேளையில், பல நாடுகளில் அதிக வரி சுமைகள் உள்ளன. உதாரணமாக, இந்தியாவில் வருமான வரி, ஜிஎஸ்டி, சொத்து வரி மற்றும் பல்வேறு வகையான மறைமுக வரிவிதிப்பு உட்பட, குடிமக்கள் குறைந்தபட்சம் 17 வெவ்வேறு வகையான வரிகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்த உயர் வரி விகிதம் பல குடிமக்களுக்கு சுமையாக இருக்கலாம்.

50 % தள்ளுபடி.. மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொல்லப்போகும் ரயில்வே.. என்ன தெரியுமா?

click me!