ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.10 லட்சம் இலவசமாகப் பெற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ரூ.10 லட்சம் கிடைப்பதற்கான அருமையான வாய்ப்பை வழங்கி உள்ளது. ஆன்லைன் செயல்முறையை நிறைவு செய்து இந்தத் தொகையை வசப்படுத்தும் வாய்ப்பைப் பெறலாம். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் சிறந்த வாய்ப்பு இது. ரூ.10 லட்சம் ரொக்கமாகக் கிடைக்க பொன்னான வாய்ப்பை ஆர்பிஐ கொடுக்கிறது. இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதற்கான என்ன செய்ய வேண்டும் என விவரமாகத் தெரிந்துகொள்வோம்.
24
Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் வினாடி-வினா போட்டிகளை நடத்துகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. ஆர்பிஐ நடத்தும் இந்த வினாடி-வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான பதிவு செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 17ஆம் தேதி இரவு 9 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் வேண்டும். இன்னும் சில நாட்களே அவகாசம் உள்ளதா வினாடி வினாவில் திறமை காட்டும் நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஆர்பிஐ வினாடி-வினா போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
34
RBI 90 Quiz
ஆர்பிஐ குவிஸ் போட்டியில் இந்தியப் பொருளாதாரம், ரிசர்வ் வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் கேள்விகள் கேட்கப்படும். நான்கு நிலைகளைக் கொண்ட இந்தப் போட்டி முதலில் ஆன்லைன் முறையில் இருக்கும். முதலிடத்தில் வருபவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும்.
மாநில அளவிலான போட்டிகளில் ஜெயித்தால் மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ளலாம். இறுதியாக தேசிய அளவிலான இறுதிப்போட்டி நடைபெறும். தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 10 லட்சம், ரூ. 8 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் பரிசாகத் தரப்படும்.
44
RBI Quiz 2024
மண்டல அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் இளைஞர்களுக்கு முறையே ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம், ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும். மாநில அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ. 1.5 லட்சம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கும்.
ஆர்பிஐ நடத்தும் இந்த க்விஸ் போட்டி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படும். செப்டம்பர் 1ஆம் தேதி 25 வயதுக்குள் ஆகும் இளைஞர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். க்விஸ் போட்டிகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.rbi90quiz.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணம் ஏதும் கிடையாது.