Income Tax saving ideas for couple
கணவன்-மனைவி இடையேயான உறவில் இருவரும் நிதி ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியும். அதற்கு உதவும் வகையில் சில வாய்ப்புகள் உள்ளன. கணவனும் மனைவியும் இணைந்து பல பெரிய பலன்களைப் பெறலாம். இது பணத்தைப் பெருக்குவதற்கு உதவுவது மட்டுமின்றி, ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.
Income Tax savings on Education loan
பல திருமணமான தம்பதிகள் தங்கள் மனைவிகள் மேலும் படிக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கல்விக் கடன் பெறுவது உதவியாக இருக்கும். அந்த கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். கல்விக் கடனுக்கான வட்டிக்கு 8 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு பெறலாம்.
வருமான வரியின் 80இ பிரிவின் கீழ் இந்த விலக்கு கிடைக்கும். மனைவி பெயரில் கடனைப் பெறும்போது, மாணவர் கடனாகப் பெற வேண்டும். அதையும் அரசு வங்கி, அரசு அங்கீகாரம் பெற்ற வங்கி அல்லது அரசு நிறுவனத்தில் இருந்து பெற வேண்டும்.
Income Tax savings on Stock market investment
பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடு செய்தால், ரூ.1 லட்சம் வரையிலான மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவியின் வருமானம் மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது அவர் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலோ, அவர் பெயரில் கொஞ்சம் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இந்த வழியில், மனைவிக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்த பணத்தின் மீதான வருமானத்தில் ரூ.1 லட்சம் வரை மூலதன ஆதாயங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
ஏற்கனவே ரூ.1 லட்சம் மூலதன ஆதாயம் இருந்தால், மனைவி பெயரில் கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ.1 லட்சம் சேர்ந்து மொத்தம் ரூ.2 லட்சமாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், ரூ.1 லட்சத்திற்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். எனவே இந்த முறையிலும் வரியைச் சேமிக்கலாம்.
Income tax savings on Home Loan
சொந்த வீடு கட்ட கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கூட்டு வீட்டுக் கடனைப் பெறுவதன் மூலம் வரியைச் சேமிக்கலாம். வாங்கும் வீட்டை இருவரின் பெயரிலும் பதிவு செய்தால், இருவரும் வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகைகளைப் பெறலாம். இதன் மூலம், வரியில் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அசல் தொகையில், இருவரும் தலா ரூ. 1.5 லட்சம், அதாவது மொத்தம் ரூ. 3 லட்சம் சேமிக்கலாம்.
இந்த வரிச் சுலுகை பிரிவு 80சி இன் கீழ் அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இருவரும் பிரிவு 24 இன் கீழ் வட்டியில் தலா ரூ.2 லட்சம் வரிச்சலுகையைப் பெறலாம். மொத்தத்தில் ரூ.7 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெற முடியும். இருப்பினும், இது வீட்டுக் கடன் தொகை எவ்வளவு என்பதைப் பொறுத்ததுதான்.