EPF Contribution Stop Effects: உங்கள் PF ஒரு சேமிப்புக் கணக்கு மட்டுமல்ல, ஓய்வூதியத்திற்கான நீண்ட கால முதலீடும். ஆனால், EPF பங்களிப்பை நிறுத்தினால் என்ன நடக்கும்? கணக்கு எப்போது செயலிழக்கும், வரி எப்படி விதிக்கப்படும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் EPF பிடித்தம் செய்யப்படும் வேலையை விடும்போது அல்லது EPF சட்டத்தின் கீழ் வராத வேலையில் சேரும்போது, புதிய பங்களிப்புகள் நின்றுவிடும். ஆனால் உங்கள் EPF கணக்கு செயலில் இருக்கும். இதனால் வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
25
செயலற்ற பிஎஃப் கணக்கிற்கு எப்போது வரை வட்டி கிடைக்கும்?
36 மாதங்களுக்கு (3 ஆண்டுகள்) எந்த பங்களிப்பும் செய்யப்படவில்லை என்றால், கணக்கு செயலற்றதாகிவிடும் (Inoperative). அதுவரை வட்டி கிடைக்கும். கணக்கு செயலற்ற பிறகு, புதிய வட்டி சேராது, ஆனால் உங்கள் இருப்பு பாதுகாப்பாக இருக்கும்.
35
PF பணத்தை எடுப்பதால் வரிவிதிப்பில் என்ன பாதிப்பு ஏற்படும்?
இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால், உங்கள் EPF இருப்பை எடுக்கலாம். 5 வருட தொடர் சேவைக்கு முன் எடுத்தால் வரி உண்டு. உங்கள் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு, வட்டிக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.
வேலை மாறும்போது EPF கணக்கை செயலற்றதாக விடுவதை விட, மாற்றுவது நல்லது. UAN மூலம் அனைத்து EPF கணக்குகளையும் இணைத்து மாற்றுவது எளிது. இது சேவை பதிவைப் பாதுகாக்கும், வரி நன்மைகள் தொடரும், சேமிப்பு வளரும்.
55
EPF கணக்கை ஏன் புறக்கணிக்கக் கூடாது?
EPF-ல் முதலீடு செய்யாதது நீண்ட கால செல்வத்தை பாதிக்கும். தவறவிட்ட வட்டி மற்றும் வரிச் சேமிப்பு ஓய்வூதிய நிதியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். KYC விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் கணக்கைக் கண்டறிவது கடினம்.