சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் ₹91,400-ஐ தாண்டியுள்ளது. சர்வதேச முதலீடுகள், உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், நகை விற்பனை மந்தமடைந்து மக்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களும் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் நகைகடைகளில் கூட்டம் குறைந்துள்ளது. தங்க நகை விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
23
ஆபரணத்தங்கத்தின் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 425 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 680 ரூபாய் அதிகரித்து 91,400 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி 187 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயாக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
33
காரணத்தை தெரிஞ்சுகிட்டா நீங்க கிங்கு
தங்கத்தின் விலை அதிகரிக்க பல முக்கிய காரணங்கள் உள்ளன. உலக பொருளாதாரத்தில் அசாதாரண நிலை உருவானாலோ, பங்கு சந்தையில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டாலோ முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைத் தேர்வுசெய்வார்கள். அதனால் தேவைகள் அதிகரித்து விலையில் உயர்வு வரும். மேலும், சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது. மத்திய வங்கிகள் தங்கம் கையிருப்பை அதிகரித்தாலும் விலை உயர்ந்து வருகிறது. அரசியல் பதட்டம், போர், பணவீக்கம் போன்ற காரணங்களும் தங்க விலையை தூண்டும். இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் திருமணம், விழாக்கள் நேரங்களில் அதிக தேவை இருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாகும்.