முதலில் Protean (முந்தைய NSDL) அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு விண்ணப்ப வகையின் கீழ் 'Changes or Correction in Existing PAN Data' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் 'Category' பிரிவில் 'Individual' என்பதைத் தேர்வு செய்யவும். உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் (Email ID) மற்றும் தற்போதைய பான் எண் ஆகிய முக்கிய விவரங்களை உள்ளிட்டுச் சமர்ப்பிக்கவும். இப்போது உங்களுக்கான ஒரு டோக்கன் எண் (Token Number) உருவாக்கப்படும்.
உங்களுடைய அடையாளச் சான்றுகளைத் தேர்ந்தெடுத்து, தயாராக வைத்துள்ள புதிய புகைப்படம் மற்றும் கையெழுத்தின் ஸ்கேன் நகல்களை விதிமுறைகளின்படி (குறிப்பிட்ட சைஸ் மற்றும் ஃபார்மட்) அப்லோடு செய்யவும். விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு, இதற்கான ஆன்லைன் கட்டணமான ரூ.107-ஐ (ஆன்லைன் பேங்கிங்/UPI/கார்டு மூலம்) செலுத்தவும். பேமெண்ட் முடிந்ததும், உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் உங்களது விண்ணப்ப செயல்முறை வெற்றிகரமாக முடிவடைந்துவிடும். இறுதியாக இதற்கான ஒப்புதல் ரசீது (Acknowledgement Receipt) உங்களுக்குக் கிடைக்கும்.