Best Companies to Work in India 2026: கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இன்ஸ்டிடியூட்' அமைப்பு, 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வேலைக்கான இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வேலை செய்யும் சிறந்த நிறுவனம் எது? என்ற கேள்விக்கு ஆண்டுதோறும் வெளியாகும் 'Great Place To Work' பட்டியல் பலரின் கவனத்தை ஈர்க்கும். ஊழியர்களின் வேலை சூழல் மற்றும் நிறுவனத்தின் கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பட்டியலில், இந்த முறை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
25
இந்தியாவின் சிறந்த பணியிடங்கள் 2026
'கிரேட் பிளேஸ் டு ஒர்க் இன்ஸ்டிடியூட்' வெளியிட்ட இந்தியாவின் சிறந்த பணியிடங்கள் 2026 பட்டியலில் ஹில்டன், சிஸ்கோ சிஸ்டம்ஸ் இந்தியா மற்றும் சிங்க்ரோனி இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதே பட்டியலில் ரிலையன்ஸ் ரீடெய்ல் 13-வது இடத்தைப் பெற்று முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது வேலை சூழல், ஊழியர் நம்பிக்கை மற்றும் நிறுவன கலாச்சாரத்தில் ரிலையன்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை வெளிப்படுத்துகிறது.
35
ரிலையன்ஸ் ரீடெயில்
இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடெய்லில் தற்போது 1,30,457-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவ்வளவு பெரிய பணியாளர் அமைப்புடன் செயல்பட்டாலும், சிறந்த வேலை சூழலை உருவாக்கியதற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு இணைந்து 'இந்தியாவின் சிறந்த பணியமர்த்துபவர்கள் தேசத்தை கட்டியெழுப்பும்' என்ற சிறப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசை வெறும் நிறுவனத்தின் பெயர் அல்லது வருவாயை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. இதில் 75 சதவீத மதிப்பெண் ஊழியர்களின் 'Trust Index Survey' கருத்துகளின் அடிப்படையிலும், 25 சதவீதம் நிறுவனத்தின் கலாச்சாரம், மனிதவள நடைமுறைகள் மற்றும் பணியாளர் மேம்பாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. எனவே, இந்த அங்கீகாரம் ஊழியர்களின் நேரடி கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
55
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றி
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், ரிலையன்ஸ் ரீடெய்ல் பெற்றுள்ள இந்த அங்கீகாரம் அதன் வணிக வெற்றி மட்டுமல்ல, ஊழியர்களுக்கான நம்பிக்கையான பணிச்சூழலையும் எடுத்துக்காட்டுகிறது. வேலை தேடுபவர்களுக்கு, நிறுவனத்தின் சம்பளத்துடன் அதன் வேலை கலாச்சாரத்தையும் கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த பட்டியல் மீண்டும் நினைவூட்டுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.