Savings Account: சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? இதை மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

Published : Jun 27, 2026, 02:31 PM IST

Savings Account: சேமிப்பு கணக்கில் எவ்வளவு எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதிகளவு ரொக்கப் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கக்கூடும். அதற்கான லிமிட் எவ்வளவு? என்பதை பார்க்கலாம்.

PREV
15
சேமிப்பு கணக்கு லிமிட்

சேமிப்பு வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? அதிக தொகை இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. சம்பளம் பெறுபவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தினசரி பணப் பரிவர்த்தனைகளுக்கு சேமிப்பு கணக்கையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

25
வங்கி கணக்கு

உண்மையில், வரிச் சட்டத்தில் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் வருமானம் மொத்தத் தொகைக்கு எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது, உங்கள் வருமானத்திற்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை சேமித்து வைக்கலாம். இருப்பினும், ஒரே நேரத்தில் அதிகளவு ரொக்கப் பணத்தை அடிக்கடி செலுத்தினால் அல்லது உங்கள் வருமான விவரங்களுடன் பொருந்தாத பரிவர்த்தனைகள் நடந்தால், அந்தத் தகவல்கள் வங்கிகள் மூலம் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது.

35
வருமான வரி விதிகள்

அவ்வாறான சூழலில், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது வருமான வரித்துறை விளக்கத்துடன் கேட்கலாம். அப்போது சம்பள வருமானம், தொழில் வருமானம், சொத்து விற்பனை, பரிசுத் தொகை, காப்பீட்டு முதிர்வுத் தொகை அல்லது பரம்பரைச் சொத்து போன்றவற்றுக்கான ஆதார ஆவணங்கள் இருந்தால் எந்த சிக்கலும் ஏற்படாது. எனவே, பெரிய தொகை பரிவர்த்தனைகளுக்கான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

45
வருமான வரிச் சட்டம்

மற்றொரு முக்கிய விஷயம், சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு வரி கிடையாது. ஆனால் அந்தப் பணத்திற்கு வங்கி வழங்கும் வட்டி வருமானம் வரிக்குட்படும். இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTA-ன் கீழ் தகுதியானவர்களுக்கு சேமிப்பு கணக்கு வட்டியில் குறிப்பிட்ட அளவு வரை கழிவு பெறலாம். மூத்த குடிமக்களுக்கு பிரிவு 80TTB-ன் கீழ் கூடுதல் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

55
வருமான வரித்துறை

எனவே, சேமிப்பு கணக்கில் அதிக தொகை இருப்பதாலேயே வரி விதிக்கப்படும் என்ற எண்ணம் தவறானது. ஆனால், உங்கள் வருமானத்துக்கு ஏற்ப அனைத்து பரிவர்த்தனைகளும் சட்டபூர்வமாகவும் ஆவணங்களுடன் இருப்பதும், வருமான வரி கணக்கில் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அவசியம். அவ்வாறு செய்தால் தேவையற்ற வரிச் சிக்கல்களை எளிதாகத் தவிர்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories