Own House: வாஸ்துவால் தள்ளிப்போகும் சொந்தவீடு கனவு! இப்படி செய்தால் எல்லாம் சரியாகும்!

Published : Jul 15, 2025, 02:29 PM IST

சொந்த வீடு என்பது அனைவரின் கனவு. வாஸ்து சாஸ்திரம் பின்பற்றுவது அவசியமா? நடைமுறை வாழ்க்கைக்கும் வாஸ்து நம்பிக்கைக்கும் இடையே உள்ள சமநிலையைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது.

PREV
18
சொந்த வீடு எனும் சந்தோஷம்!

சொந்த வீடு என்பது பெரும்பாலானோருக்கு வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு. அந்த வீட்டில் குடும்பத்தோடு ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு வாஸ்து சாஸ்திரம் கட்டாயமா என்று பலரும் கேட்கிறார்கள்.

28
வாஸ்து நம்பிக்கையின் பின்னணி

வாஸ்து சாஸ்திரம் என்பது நம் முன்னோர்கள் பரம்பரையாக கொண்டு வந்த, வீட்டின் அமைப்பு குறித்து கூறும் ஓர் அறிவியல் நம்பிக்கை. வீடு, அதன் திசைகள், அறைகள், வாசல்கள் இவற்றின் இடப்பெயர்வால் நம் வாழ்வில் நல்லதும் கெட்டதும் நிகழும் என பலர் நம்புகிறார்கள். இதன் காரணமாக, வாஸ்துவுக்கு ஏற்ற வீடுகளை மட்டுமே தேடி பலரும் காலம் வீணடிக்கிறார்கள்.

38
வாஸ்து சரியா இல்லையா என்பதில் சந்தேகம்

எந்த ஒரு வீட்டையும் வாஸ்து முறையாகத்தான் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிலர், "இந்த வீட்டில் வாஸ்து சரியில்லை; அதனால் தான் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருகின்றன" என்று குறை சொல்கிறார்கள். ஆனால் அதே பகுதியில், அதே திசையில் இருக்கும் மற்ற வீடுகளில் மகிழ்ச்சியாக வசிப்பவர்களும் இருக்கிறார்கள். இதுவே பிரச்சினை மனநிலையில்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

48
அடிப்படை வாஸ்து நோக்கம்

வீடு கட்டும்போது இயற்கை வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும் வகையில் கட்டுவது நல்லது. சமையல் அறை தென்கிழக்கு அல்லது வடமேற்கு, குளிர்சாதன அறைகள் வடமேற்கு, படுக்கை அறை தெற்கு அல்லது மேற்கு போன்ற அடிப்படை வாஸ்து விஷயங்களை பின்பற்றலாம். இவை பயன்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

58
வாஸ்துவின் நம்பிக்கை ஒரு சென்டிமென்ட்

பல வாடிக்கையாளர்களுக்கு வாஸ்து ஒரு சென்டிமென்ட். அவர்கள் மனதில் நிம்மதி ஏற்படும் வகையில் வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று பிளான் தயார் செய்து, அதன்படி வீடு கட்டலாம். ஆனால் அதற்காக 100% வாஸ்து சரியிருக்க வேண்டுமென்று வீடு தேடிக் கொண்டு காலம் கழிப்பது நடைமுறை சார்ந்த அணுகுமுறை அல்ல

68
வாஸ்து சாஸ்திரம் பார்க்க வேண்டியவர்கள் என்ன செய்யலாம்?
  • வீட்டு திட்டம் தொடங்கியவுடன் விரைந்து வாடிக்கையாளர் முன்பதிவு செய்து, தங்களுக்கு பிடித்த திசை மற்றும் வாஸ்து அமைப்புடன் வீடு தேர்ந்தெடுக்கலாம்.
  • பில்டர்களிடம் தங்களின் நம்பிக்கைகள் மற்றும் தேவைகளை ஆரம்பத்திலேயே தெரிவிக்கலாம்.
  • திசை, வாஸ்து சம்பந்தப்பட்ட மாற்றங்களை முன்பே திட்டத்தில் செய்துகொள்ளலாம்.
  • அனைத்து அறைகளுக்கும் வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
78
வாஸ்துவை மட்டுமே முக்கியமாக எண்ணினால்?

நீங்கள் வாஸ்துவுக்கு 100% முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால், உங்கள் கனவு வீடு தேடல் வெறும் கனவாகவே முடிந்துவிடும். நடைமுறை சிந்தனையுடன், அடிப்படை வசதிகளும், குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும் வீட்டை முதலில் தேர்வு செய்து, பிறகு வாஸ்து பரிந்துரைகளை இணைத்துக் கொள்ளலாம்.

88
திட்டமிட்டால் எல்லாம் சரியாகும்

சொந்த வீடு என்பது வாழ்நாள் நினைவுகளைக் கட்டும் இடம். வாஸ்து நம்பிக்கைகளைப் பின்பற்ற விரும்பினால் அதில் தவறில்லை. ஆனால் அவற்றையே அடிப்படையாக வைத்துக் கொண்டு, உங்கள் கனவுகள் தள்ளிப்போக வேண்டாம். நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட, அனுமதி பெற்ற, உங்கள் குடும்பத்துக்கேற்ற வீடு வாங்குவது தான் முக்கியம். வாஸ்துவும் உங்கள் நிம்மதியையும் சமநிலையில் வைத்துக் கொண்டால், அந்த வீட்டில் நிச்சயமாக உங்கள் வாழ்க்கை சிறக்கத் துவங்கும்!

Read more Photos on
click me!

Recommended Stories