கிரெடிட் கார்டு கடன்?! இதை தெரிஞ்சுகிட்டா ஈசியா சமாளிக்கலாம்!

Published : Jul 15, 2025, 11:54 AM IST

கிரெடிட் கார்டு கடன் சுமையைத் தவிர்க்க சரியான நேரத்தில் பணம் செலுத்துதல், லிமிட்டைக் கடக்காதிருத்தல், தேவையற்ற சலுகைகளைப் பயன்படுத்தாதிருத்தல், அதிக கார்டுகளைத் தவிர்ப்பது மற்றும் பெரிய நிலுவைகளை EMI ஆக மாற்றுவது போன்ற வழிமுறைகள் உதவும்.

PREV
17
கிரெடிட் கார்டு கடன் சிக்கல்!

பலருக்கும் கிரெடிட் கார்டு ஆரம்பத்தில் ஒரு நலம் தரும் வசதியாக தெரிந்தாலும், சரியாக செலுத்தாமலும் திட்டமின்றி பயன்படுத்தினாலும் அது கடன் சுழலில் தள்ளி விடும் அபாயம் உண்டு. சில விஷயங்களை செய்தால் கிரெடிட் கார்டு கடன் சிக்கலில் இருந்துதப்பிக்கலாம்.

27
சரியான நேரத்தில் பணத்தை செலுத்துங்கள்

முதல் முக்கிய நடைமுறை – தவறாமல் தங்களுடைய நிலுவைப் பணத்தை சரியான தேதிக்குள் செலுத்த வேண்டும். ஒரே மாதம் தாமதமானால் கூட, கூடுதலான வட்டி அதிகம் சேர்ந்து விடும். பல கிரெடிட் கார்டுகள் மாதத்திற்கு 3% முதல் 4% வரை வட்டி வசூலிக்கின்றன. ஆண்டுக்கு இது 36%க்கு மேல் சேரும். இவ்வளவு அதிக வட்டியைத் தவிர்க்க, பில் தேதிக்கு முன்பே பணத்தை கட்டிவிடுங்கள்.

37
உங்களின் லிமிட்டை கடந்துவிடாதீர்கள்

கிரெடிட் கார்டு லிமிட்டில் எல்லாம் வாங்கி நிரப்பிப் போட்டுவிடும் பழக்கம் மிக மோசமானது. உதாரணமாக, ஒரு லட்சம் லிமிட்டுள்ள கார்டில் 30,000 ரூபாய்க்கு மேல் எப்போதும் பயன்படுத்தவேண்டாம். இது உங்கள் செலவினத்தை கட்டுப்படுத்த உதவும். அதிகமான பயன்பாடு, சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.

47
சலுகைகள் இருந்தாலும் சிந்தித்துப் பயன்படுத்துங்கள்

கேஷ்பேக், டிஸ்கவுண்ட், ரிவார்ட்ஸ் பாயின்ட் போன்ற சலுகைகள் தருவதைக் கேட்டு தேவையில்லாத செலவுகளைச் செய்யவேண்டாம். நிச்சயமாக உங்களுக்கு தேவைப்பட்ட விஷயங்களுக்குத்தான் சலுகைகளை பயன்படுத்துங்கள். இது செலவைக் குறைக்கும்.

57
அதிக கிரெடிட் கார்டுகள் வேண்டாம்

பல நிறுவனங்கள் அனுகி, பல கார்டுகளை கொடுப்பதாகச் சொல்வார்கள். ஒருவருக்கு இரண்டு கார்டுகளுக்கு மேல் வைத்திருப்பது தேவையில்லை. அதிக கார்டுகள் வைத்தால் கட்டுப்பாடு குறையும், கடன் சுமை அதிகரிக்கும்.

67
பெரும் நிலுவையை இ.எம்.ஐ. ஆக மாற்றுங்கள்

எப்போதாவது பெரிய தொகையைச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடனை இ.எம்.ஐ. ஆக மாற்றுங்கள். இது வட்டியை குறைக்கும், ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக கட்ட முடியும். இந்த காலத்தில் புதிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

77
இதெல்லாம் அவசியம்
  • உங்கள் சிபில் ஸ்கோரை 6 மாதத்திற்கு ஒருமுறை பாருங்கள். 750க்கு மேல் வைத்திருப்பது நல்லது.
  • திட்டமிட்டு பயன்படுத்தினால், பணம் சேமிப்பும், நிதி ஒழுங்கும் கிடைக்கும்.
  • இவை அனைத்தையும் பின்பற்றி, கிரெடிட் கார்டுகளை சிக்கலின்றி நிதானமாக, நன்மைக்கே பயன்படுத்துங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories