அக்டோபர் 1, 2026 முதல் VDA உயர்வு அமல். விவசாயத் தொழிலாளிக்கு ரூ.537, கட்டுமானத் தொழிலாளிக்கு ரூ.840 முதல் ரூ.1,111 வரை புதிய குறைந்தபட்ச ஊதியம். பகுதி A, B, C விவரங்கள் மற்றும் முழு விகிதங்களை இங்கே பாருங்கள்.
திருத்தம் செய்யப்பட்டுள்ளது VDA.! சம்பளம் உயர்வு.!
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் (Labour Bureau), விலைவாசிப்படிப்படி (Variable Dearness Allowance - VDA) விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்த திருத்தம் அக்டோபர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-IW, அடிப்படை 2016=100) ஜூன் 30, 2026 அன்று 424.80-இல் இருந்து 431.42 ஆக உயர்ந்தது. இதனால் 6.62 புள்ளிகள் அதிகரித்துள்ளதால் VDA திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயம், கட்டுமானம், சாலை மற்றும் ரன்வே பராமரிப்பு, சுமை ஏற்றுதல்-இறக்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நேரடியாக உயர்த்தியுள்ளது.
25
VDA என்றால் என்ன?
VDA என்பது விலைவாசி உயர்வை ஈடுசெய்ய அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் மாறுபடும் கூறு. இது CPI-IW அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை (ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1) திருத்தப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம் = அடிப்படை ஊதியம் + VDA. இந்தத் திருத்தம் Minimum Wages Advisory Board முடிவின்படி அடுத்த உயர் ரூபாய்க்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதிய கட்டமைப்பிற்கு உட்பட்ட மத்திய துறை தொழிலாளர்களுக்கு மட்டும் பொருந்தும் (மாநில அரசு ஊதியங்கள் வேறுபடலாம்).
35
விவசாயத் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்
விவசாயத் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச தினசரி ஊதியம், தொழிலாளர்களின் திறன் மற்றும் அவர்கள் பணிபுரியும் பகுதியைப் பொறுத்து மாறுபடுகிறது. பகுதி A-வில் திறமையற்ற தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.537 குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அடிப்படை ஊதியம் ரூ.333 மற்றும் மாறுபடும் அகவிலைப்படி (VDA) ரூ.204 என மொத்தம் ரூ.537 கிடைக்கிறது.
அதேபோல், பகுதி B-வில் திறமையற்ற தொழிலாளருக்கு ரூ.491, பகுதி C-வில் ரூ.486 தினசரி ஊதியம் கிடைக்கும். அரைத் திறமையான தொழிலாளர்கள் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு முறையே ரூ.587, ரூ.539, ரூ.496 வழங்கப்படுகிறது. திறமையான தொழிலாளர்கள் அல்லது எழுத்தர்களுக்கு ரூ.637, ரூ.587, ரூ.538 எனவும், மிக உயர் திறமையான தொழிலாளர்களுக்கு ரூ.705, ரூ.655, ரூ.587 எனவும் தினசரி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்
சாலை, ரன்வே, கட்டிடங்கள், கேபிள் பதிப்பு, நீர் வழங்கல் உள்ளிட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர்களின் திறன் மற்றும் பணிபுரியும் பகுதியைப் பொறுத்து மாறுபடுகிறது. பகுதி A-இல் திறமையற்ற கட்டுமானத் தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.840, அரைத் திறமையான தொழிலாளர் அல்லது மேற்பார்வையாளருக்கு ரூ.933, திறமையான தொழிலாளர் அல்லது எழுத்தருக்கு ரூ.1,024, மிக உயர் திறமையான தொழிலாளருக்கு ரூ.1,111 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பகுதி B-இல் ரூ.704 முதல் ரூ.1,024 வரையிலும், பகுதி C-இல் ரூ.565 முதல் ரூ.933 வரையிலும் தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் சுமை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் இதே VDA விகிதங்கள் பொருந்தும்.
55
விலைவாசி உயர்வை ஈடுசெய்ய நடவடிக்கை
இந்த உயர்வு சுத்தம் செய்யும் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் (ஆயுதத்துடன்/இல்லாமல்) மற்றும் சில சுரங்கப் பணிகளுக்கும் பொருந்தும். சுரங்கங்களில் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி பணிகளுக்கு தனி விகிதங்கள் உள்ளன. பகுதி A, B, C என்பது நகரங்கள் மற்றும் பகுதிகளின் வகைப்பாடு ஆகும் (2017 அறிவிக்கையின்படி). இந்தத் திருத்தம் Code on Wages, 2019-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் இந்த நடவடிக்கை, குறிப்பாக விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும். தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகள் மூலம் புதிய விகிதங்களின்படி ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிக்கைகளை தொழிலாளர் பணியகத்தின் வலைத்தளத்தில் பார்க்கலாம். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முக்கிய நடவடிக்கையாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.