வந்தே பாரத் ரயில்களில் இனி ஈஸியா சீட் கிடைக்கும்! குட் நியூஸ் சொன்ன ரயில்வே! பயணிகள் கொண்டாட்டம்!

Published : Aug 29, 2025, 09:41 AM IST

7 வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 2 ரயில்கள் இடம்பெற்றுள்ளன. 

PREV
14
Vande Bharat Trains Extra Coaches Announced

இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

24
வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு

நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கும் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகமாக செல்லும் ரயில் என்பதால் இந்த அனைத்து ரூட்களிலும் வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் தினமும் நிரம்பி விடுகின்றன. ஆகையால் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது.

34
சென்னை டூ நெல்லை வந்தே பாரத்

ஆகையால் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ரயில்வே வாரியம் 7 வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது சென்னை எழும்பூர் – நெல்லை, மதுரை – பெங்களூரு, மங்களூரு – திருவனந்தபுரம், செகந்திராபாத் – திருப்பதி, தியோகர் – வாரணாசி, ஹௌரா – ரூர்கேலா மற்றும் இந்தூர் – நாக்பூர் ஆகிய வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

44
இனி எளிதாக சீட் கிடைக்கும்

இந்த பட்டியலில் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயிலும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரயிலும் இடம்பெற்றுள்ளது பயணிகளுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. சென்னை டூ திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் வரவேற்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பல நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தும் பெருமபாலான பயணிகளுக்கு சீட் கிடைப்பதில்லை. இப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதால் இனிமேல் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories