வியாபாரிகளுக்கு ஜாக்பாட்! எந்த ஆவணமுமின்றி ரூ.50,000 கடன்! அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு!

Published : Aug 28, 2025, 05:31 PM IST

மத்திய அரசு எந்தவித ஆவணமுமின்றி சிறு வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கி வருகிறது. இது குறித்துமுழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
PM SVANidhi Rs.50,000 Loan Without Documents

மத்திய அரசு பெண்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அப்போது தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்கிடும் வகையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் PM SVANidhiஎன்ற திட்டத்தை தொடங்கியது.

24
சிறு வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்

இது வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ கிரெடிட் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி சாலையோர வியாரிகள், சிறு கடை உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.30,000 வழங்கப்படும். ஆனால் இந்த 30,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படாது. முதல் தவணையாக ரூ.15,000 வழங்கப்படும். அதை கட்டி முடித்தவுடன் இரண்டாம் தவணையாக ரூ.25,000 வழங்கப்படும். அதை கட்டி முடித்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.50,000 வரை வியாபாரிகள் கடன் வாங்க முடியும்.

34
சரியாக கடன் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை

இப்படி தவணை தவணையாக கடன் வழங்குவது மூலம் வியாபாரிகள் தாங்கள் வாங்கிய கடனை எளிதில் திருப்பி செலுத்த முடியும். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் வியாபாரிகள் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.1,200 மானியமும் பெறலாம். PM SVANidhi திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்துடன் UPI-இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

44
யார் யார் கடன் வாங்கலாம்?

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24க்கு முன்னதாக நகர்ப்புறங்களில் செயல்பட்டு வந்த தெருவோர வியாபாரிகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் PM SVANidhi திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற முடியும். இந்த கடனை வங்கிகள் வழங்குகின்றன. தகுதிவாய்ந்த வியாபாரிகள் அல்லது பயனாளிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பிற அடையாள அட்டையை சம்பத்தப்பட்ட வங்கிகளில் சமர்பித்து கடன்களை வாங்கிக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories