Published : May 12, 2025, 11:35 AM ISTUpdated : May 12, 2025, 11:38 AM IST
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணச்சீட்டு விலை தற்போது குறைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 800 கி.மீ தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கிறது.
24
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
தற்போது, 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சௌகரியமான பயணத்திற்கு பெயர் பெற்றது. இப்போது வந்தே பாரத் பயணச்சீட்டு விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
34
வந்தே பாரத் ரயில் கட்டணங்கள்
கட்டணத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டணக் குறைப்பு குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வருமான அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். மேலும், கட்டணத்தில் சலுகைகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் பொதுமக்கள் பலரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்த தொடங்குவார்கள் என்பதில் ஆச்சர்யமில்லை.