வந்தே பாரத், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 155 ரயில்களை ரயில்வே வாரியம் அதிவேக ரயில்களாக அறிவித்துள்ளது. இந்த முடிவால், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மற்றும் ரயில் மேலாளர்களுக்கு சிறப்புப் படி வழங்கப்பட்டு, அவர்களின் மாதச் சம்பளம் கணிசமாக உயரும்.
வந்தே பாரத், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 155 ரயில்களை அதிவேக ரயில்களாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவால், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மற்றும் ரயில் மேலாளர்களுக்கு இனி சிறப்புப் படி கிடைக்கும். இதனால் அவர்களின் மாதச் சம்பளமும் உயரும்.
இந்த ரயில்கள் ஏற்கனவே அதிக வேகத்தில் இயக்கப்பட்டு வந்தாலும், இதுவரை அதிவேக ரயில்கள் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெறாததால், லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகள் சிறப்பு அலவன்ஸ் பெற முடியாத நிலை இருந்தது. தற்போது இந்த ரயில்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், ரயில்வே ஊழியர்களுக்கு கூடுதல் நிதி பலன் கிடைக்க உள்ளது.
புதிய உத்தரவின்படி, லோகோ பைலட்டுகளுக்கான 100 கிலோமீட்டர் மைலேஜ் கட்டணம் ரூ.485-இலிருந்து ரூ.606 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் கார்டுகளுக்கான கட்டணம் ரூ.439-இலிருந்து ரூ.549 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஊழியர்களின் மாத வருமானத்தில் கணிசமான உயர்வை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
55
சம்பள உயர்வு
மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது மிகுந்த கவனமும் திறமையும் தேவைப்படும். அதிக வேகம், தொழில்நுட்ப கட்டுப்பாடு மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சூழல் உள்ளது, இந்த சிறப்பு திறனை மதிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அலவன்ஸ் உயர்வை வழங்கியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையால், தகுதியான ரயில்வே ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு சுமார் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரயில்வே பணியாளர்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.