DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஒரு மாநில அரசு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 5% உயர்வை அறிவித்ததால், மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு கிடைக்க உள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்புகள் எப்போதும் அதிக கவனத்தைப் பெறும். பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில், மாத வருமானத்தில் கூடுதல் தொகை கிடைக்கும் செய்தி இயல்பாகவே எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. தற்போது அப்படியான ஒரு முக்கிய அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு தொடர்பான இந்த புதிய முடிவு, லட்சக்கணக்கான குடும்பங்களின் மாதாந்திர நிதி திட்டத்தால் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
24
அரசு ஊழியர்களுக்கு சம்பள குட் நியூஸ்
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த மாற்றம் பலன் தரவுள்ளது. இதனால் மாத வருமானத்தில் கூடுதல் நிம்மதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது திரிபுரா அரசு. முதலமைச்சர் மாணிக் சாஹா தலைமையிலான அரசு, அகவிலைப்படி மற்றும் அகவிளை நிவாரணத்தில் மேலும் 5 சதவீத உயர்வை அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மாற்றம் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
லட்சக்கணக்கானோருக்கு நிதி நிம்மதி
இந்த நடவடிக்கையால் சுமார் 1.02 லட்சம் அரசு ஊழியர்களும், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடியாக பலன் பெறுகின்றனர். மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில மத்திய அரசின் அகவிலைப்படி அளவுக்கு ஊழியர்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் ரயில்வே, வங்கி மற்றும் பல மாநிலங்களிலும் சம்பளம், அகவிலைப்படி திருத்தங்கள் குறித்த விவாதங்கள் வேகமடைந்துள்ளன. மேலும், எட்டாவது ஊதியக் குழு தொடர்பான எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் சம்பளம் மற்றும் சலுகை அமைப்புகள் மீண்டும் தேசிய விவாதமாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.