வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பது என்றாலே பலருக்கும் நீண்ட தொழிலாளர் காத்திருப்பு, ஆவணச் சரிபார்ப்பு, அலுவலக அலைச்சல் போன்ற அனுபவங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த பழைய நடைமுறையை மாற்றும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது புதிய 3.0 முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த புதிய மாற்றத்தின் முக்கிய அம்சமாக, வருங்கால வைப்பு நிதி பணத்தை நேரடியாக ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை முறையின் மூலம் பெறும் வசதி இடம்பெறவுள்ளது. சோதனைகள் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த சேவை அறிமுகமானால் கோடிக்கணக்கான ஊழியர்களின் அனுபவம் முற்றிலும் மாறக்கூடும்.