அமெரிக்காவின் வரி விளையாட்டு.! இந்தியாவில் தங்கம் விலை குறையுமா.? வெள்ளி விலையில் தங்கம் வாங்கலாமா.?

Published : Aug 08, 2025, 10:41 AM IST

அமெரிக்காவின் புதிய சுங்கவரி இந்திய ஏற்றுமதியை பாதிக்கும். தங்கம், வைரம் போன்ற பொருட்களின் விலை உயரும். இந்திய சந்தையில் சில பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

PREV
14
டிரம்பின் வரியால் சரிவடையும் ஏற்றுமதி.!

அமெரிக்கா, இந்தியாவின் பல முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு 50% புதிய சுங்க வரியை விதித்துள்ளது. இந்த “வரி விளையாட்டு” நேரடியாக இந்திய பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தை விலைகளையும் பாதிக்கக்கூடும். Global Trade Research Initiative வெளியிட்ட 2024-25 நிதியாண்டு தரவுகளின்படி, அமெரிக்கா இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக வைரம், தங்கம் மற்றும் தொடர்புடைய பொருட்கள் மட்டும் ரூ.83,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன; இப்பொருட்களுக்கு மொத்தம் 52.1% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

24
எந்த பொருட்கள் எந்தனை கோடிக்கு.!

ஸ்மார்ட்போன்கள் ரூ.87,980 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன; இவை தற்காலிக விலக்கு காரணமாக சுங்கவரி பாதிப்பை சந்திக்கவில்லை. ஆனால், இயந்திரங்கள் மற்றும் மெக்கானிக்கல் சாதனங்கள் ரூ.55,610 கோடி மதிப்பில் 51.3% சுங்கவரி, இரும்பு, அலுமினியம், வெள்ளி போன்ற உலோகங்கள் ரூ.38,810 கோடி மதிப்பில் 51.7% சுங்கவரி சுமையை எதிர்கொள்கின்றன. நெசவு மற்றும் துணி தயாரிப்புகள் ரூ.24,900 கோடி மதிப்பில் 59% சுங்கவரி, பின்னிய ஆடைகள் ரூ.22,410 கோடி மதிப்பில் 63.9%, நெய்த ஆடைகள் ரூ.22,410 கோடி மதிப்பில் 60.3% சுங்கவரி விதிக்கப்படுகின்றன. வேதிப்பொருட்கள் ரூ.22,410 கோடி மதிப்பில் 54%, வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ரூ.21,580 கோடி மதிப்பில் 26%, இறால் ரூ.16,600 கோடி மதிப்பில் 50%, கம்பளம் ரூ.9,960 கோடி மதிப்பில் 52.9%, மரப்பொருட்கள் மற்றும் மெத்தைகள் ரூ.9,130 கோடி மதிப்பில் 52.3% சுங்கவரி சுமையைச் சந்திக்கின்றன.

34
அமெரிக்காவில் விலை உயரக்கூடிய பொருட்கள்

அமெரிக்காவில் வைரம், தங்க நகைகள், நெசவு துணிகள், ஆடைகள், கம்பளம், உலோகப் பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் ஆகியவை சுங்கவரி உயர்வால் விலை அதிகரிக்கும். இறக்குமதி செலவு கூடுவதால் அங்கு விற்பனை விலை உயர்ந்து விடும்.

44
இந்தியாவில் விலை குறையக்கூடிய பொருட்கள்

அமெரிக்காவில் விலை அதிகரிப்பால், அந்த நாடு இந்தியாவில் இருந்து வாங்கும் அளவு குறையலாம். இதனால், இந்திய சந்தையில் தங்கம், வைரம், நெசவு பொருட்கள், ஆடைகள், கம்பளம் போன்றவை அதிகமாக கிடைக்கும்; இதன் விளைவாக உள்நாட்டு விலை குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்காலிகமாக குறையலாம். சில நிபுணர்கள் கூட, “தங்கம் வெள்ளி விலையில் கிடைக்கும் நிலை உருவாகலாம்” என மதிப்பிடுகின்றனர். ஆனால் இந்த விலை குறைவு நீண்ட காலம் நீடிக்காது. உள்நாட்டு தேவை அதிகரித்துவிட்டால் மீண்டும் விலை உயர்ந்து விடும். எனவே, முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் விலை குறையும் நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தத்தில், அமெரிக்காவின் இந்த சுங்கவரி நடவடிக்கை வைரம், தங்கம், வெள்ளி, நெசவு, ஆடைகள், கம்பளம் போன்ற பொருட்களின் சர்வதேச விலையையும், இந்திய சந்தை விலையையும் மாற்றும். சந்தையை கவனமாகப் பார்த்து செயல்படுபவர்கள், இதை ஒரு “தங்க வாய்ப்பு” ஆக மாற்றிக்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories