ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பா? உண்மை என்ன? ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

Published : Feb 22, 2025, 09:17 AM ISTUpdated : Feb 22, 2025, 09:20 AM IST

ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

PREV
17
ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பா? உண்மை என்ன?  ரயில்வே நிர்வாகம் விளக்கம்!
ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பா? உண்மை என்ன? ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பேருந்து, விமான போக்குவரத்து இருந்தாலும் குறைந்த கட்டணம் மட்டுமின்றி பாதுகாப்பான பயணம் என்பதால் அனைவரும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்தவிட்டால் சொல்லவே வேண்டாம். முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும். 

27
முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு

இந்நிலையில் நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏ.சி. ரயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

37
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில், ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில்: சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் குறைக்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

47
ரயில்வே நிர்வாகம்

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது ஆதாரமற்றது. கடந்த மாதம் முதல் அனைத்து விரைவு ரயில்களிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டது.

57
முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்கவில்லை

ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது மகா கும்பமேளாவுக்கு தேவைப்பட்டதால், கூடுதலாக தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளையும் இணைத்து, சிறப்பு ரயில்களாக பிரயாக்ராஜுக்கு இயக்கப்படுகின்றன. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி மார்ச் மாதம் முதல் இந்த பெட்டிகள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படும். அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது.

67
மகா கும்பமேளா

சென்னை சென்ட்ரல்  - ஈரோடு, சென்னை சென்ட்ரல் - ஐதராபாத், சென்னை - நாகர்கோவில், சென்னை - பாலக்காடு, விழுப்புரம் - கோரக்பூர்,  புதுச்சேரி - கன்னியாகுமரி, புதுச்சேரி - மங்களூரு, நெல்லை - புருலியா விரைவு ரயில்களில் தற்போது மூன்று முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் நான்காக அதிகரிக்கப்படும். 

77
14 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

அதேபோல் சென்னை - திருவனந்தபுரம், சென்னை - ஆலப்புழா, சென்னை - மைசூர் விரைவு ரயில்களில் தற்போதுள்ள இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள் அடுத்த மாதம் முதல் நான்காக அதிகரிக்கப்படும். மொத்தம் 14 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories