2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரிக்கலாம் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன. இதனால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம். எனவே, இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்தால், தங்கத்தை வாங்குவது ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூலை 23, 2024 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர், ஆகஸ்ட் 2024 இல் தங்க இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு தோராயமாக 104 சதவீதம் அதிகரித்து, 10.06 பில்லியன் டாலர்களை எட்டியது. இருப்பினும், அதே காலகட்டத்தில், இந்தியாவின் ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி 23 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து, 1.99 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.