ஆதார் PVC கார்டு கட்டணம் அதிரடி உயர்வு.. இனி எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா.?

Published : Jan 11, 2026, 02:41 PM IST

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் PVC கார்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உற்பத்தி மற்றும் விநியோக செலவுகள் அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் என UIDAI விளக்கம் அளித்துள்ளது.

PREV
14
ஆதார் PVC கார்டு கட்டணம்

ஆதார் அட்டை வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Unique Identification Authority of India (UIDAI), ஆதார் PVC கார்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் படி, இதுவரை ரூ.50 ஆக இருந்த ஆதார் PVC கார்டு கட்டணம், தற்போது ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. இதில் ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வரிகளும், வீட்டுக்கு நேரடியாக கார்டு அனுப்பப்படும் டெலிவரி செலவும் சேர்க்கப்பட்டுள்ளது.

24
UIDAI ஆதார் செய்தி

இந்த கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து UIDAI விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக PVC கார்டு தயாரிப்பு செலவு, அச்சிடுதல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டெலிவரி செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, கார்டின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயனர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலவுகளை சமநிலைப்படுத்தும் நோக்கில் தான் கட்டணம் திருத்தப்பட்டதாக UIDAI கூறுகிறது.

34
ஆதார் PVC கார்டு விலை

ஆதார் PVC கார்டு சேவை 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. காகித ஆதார் அட்டைக்கு மாற்றாக, நீடித்த பயன்பாட்டுக்காக இந்த PVC கார்டு உள்ளது. ஏடிஎம் அல்லது டெபிட் கார்டைப் போல உறுதியான அமைப்புடன் இருக்கும் இந்த கார்டு, எளிதில் சேதமடையாது என்பதே இதன் முக்கிய சிறப்பு. பயனர்கள் myAadhaar இணையதளம் அல்லது mAadhaar மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் இதை ஆர்டர் செய்யலாம்.

44
ஆதார் கட்டண உயர்வு

UIDAI தெரிவித்துள்ளதாவது, புதிய கட்டணம் UIDAI-யின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளங்களில் இடப்படும் அனைத்து புதிய ஆர்டர்களுக்கும் பொருந்தும். ரூ.25 உயர்வு ஏற்பட்டிருந்தாலும், பாதுகாப்பான, நீடித்த மற்றும் நம்பகமான ஆதார் PVC கார்டு கிடைப்பது பயனர்களுக்கு ஒரு முக்கிய நன்மையாகவே பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டை, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள், மொபைல் இணைப்புகள் உள்ளிட்ட பல அவசியமான சேவைகள் அடையாளமாகப் பயன்படும் நிலையில், இந்த PVC கார்டு பயனர்களுக்கு நீண்டகால வசதிகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories