உஷார்.. ரயில் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. ரயில்வே அதிரடி முடிவு

Published : Mar 03, 2026, 10:09 AM IST

இந்த செயலி மூலம் அன்ரிசர்வ், ஜெனரல், பிளாட்ஃபாரம் மற்றும் ரிசர்வேஷன் டிக்கெட்டுகளை ஒரே இடத்தில் முன்பதிவு செய்யலாம். இது மேம்பட்ட சர்வர் வேகம், எளிதான கட்டண முறைகள் மற்றும் பல புதிய வசதிகளுடன் வருகிறது.

PREV
15
ரயில் டிக்கெட்டில் புதிய விதி

இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. தினமும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது முக்கிய தகவல். மார்ச் 1, 2026 முதல் பழைய யுடிஎஸ் மொபைல் செயலி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அன்ரிசர்வ் டிக்கெட் மற்றும் பிளாட்ஃபாரம் டிக்கெட் முன்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த செயலி இனி செயல்படாது. டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, புதிய ‘ரயில்ஒன்’ சூப்பர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

25
அன்ரிசர்வ், ஜெனரல், பிளாட்ஃபாரம் டிக்கெட்

இனி அன்ரிசர்வ், ஜெனரல், பிளாட்ஃபாரம் மற்றும் லோகல் ரயில் டிக்கெட்டுகளை ரயில்ஒன் செயலி மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். ஐஆர்சிடிசி ஒப்புதலுடன் செயல்படும் இந்த புதிய தளம், ரிசர்வேஷன் மற்றும் அன்ரிசர்வேஷன் டிக்கெட்டுகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. இதனால் தனித்தனி செயலிகள் தேவையில்லை. பயணிகள் ஒரு செயலியில் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பதால், முன்பதிவு நடைமுறை எளிதாகும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

35
ரயில்ஒன் செயலி

ரயில்ஒன் செயலி மேம்படுத்தப்பட்ட சர்வர் வேகம் மற்றும் எளிய பயனர் இடைமுகத்துடன் வருகிறது. UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற பல்வேறு கட்டண வசதிகள் இதில் உள்ளன. டிக்கெட் வரலாறு, ரிஃபண்ட் செயல்முறை ஆகியவை மேலும் சுலபமாக மாற்றப்பட்டுள்ளன. QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட் சரிபார்ப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லைவ் ரயில் ஸ்டேட்டஸ், PNR சரிபார்ப்பு, டிரெயின் தேடல், டிஜிட்டல் டிக்கெட் சேமிப்பு போன்ற வசதிகளும் ஒரே செயலியில் கிடைக்கும்.

45
பழைய யுடிஎஸ் செயலி

பழைய யுடிஎஸ் செயலியில் இருந்து R-Wallet இருப்பு, அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ரயில்ஒன்-ல் பதிவு செய்தால் தானாக மாற்றப்படும். மொபைல் எண் மாற்றப்பட்டால் இருப்பு மாற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. பணத்தை திரும்ப பெற விரும்பினால், செயலியின் ‘சுயவிவரம்’ பகுதியில் ‘சரண்டர் வாலட்’ தேர்வு செய்து குறியீட்டுடன் யுடிஎஸ் கவுண்டருக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ரூ.30 கட்டணம் கழித்து தொகை வழங்கப்படும்.

55
ரயில் டிக்கெட் பதிவு முறை

ஆரம்பத்தில் சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தாலும், பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே ரயில்ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து கணக்கை புதுப்பித்துக்கொள்ள ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் பயணத்திற்கான புதிய கட்டத்தை ரயில்ஒன் தொடங்கியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories