படிப்பு தேவையில்லை.! இந்த 5 தொழில் செஞ்சா லைஃப் டைம் செட்டில்மென்ட்.!

Published : Mar 26, 2026, 11:48 AM IST

பிஸினஸ் என்றால் புதிய டெக்னாலஜி அல்லது ஸ்டார்ட்அப் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், லாண்ட்ரி, டீ கடை போன்ற தினசரி தேவைப்படும் 'போரிங் பிசினஸ்' எனப்படும் எளிய தொழில்களே குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானத்தையும் அதிக லாபத்தையும் தருகின்றன.

PREV
14
எளிய தொழில் ஐடியாக்கள்

பெரும்பாலானோர் பிஸினஸ் என்றால் புதிய டெக்னாலஜி, ஸ்டார்ட்அப் ஐடியா, அல்லது கிரியேட்டிவிட்டி நிறைந்த வேலைகள் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதிக லாபமும், நிலையான வருமானமும் தருவது "போரிங் பிசினஸ்" எனப்படும் எளிய தொழில்கள்தான். தினசரி வாழ்க்கையில் மக்கள் தவிர்க்க முடியாத சேவைகளை வழங்கும் இந்த வகை பிஸினஸ்கள், குறைந்த ஆபத்துடன் தொடர்ந்து வருமானம் ஈட்டுகின்றன.

24
லாபம் தரும் பிஸினஸ்

‘போரிங் பிசினஸ்’ என்றால் என்ன? என்பதை முதலில் பார்க்கலாம். தினமும் ஒரே மாதிரியான வேலைகள் நடைபெறும், அதிக புதுமை அல்லது சிந்தனை தேவையில்லாத தொழில்களே இவ்வகையில் அடங்கும். ஆனால் இவை சமூகத்திற்கு எப்போதும் தேவைப்படும் சேவைகள் என்பதால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கிடைப்பது உறுதி. அதனால் தான் பலர் இதை "குறைந்த ஆபத்து, அதிக லாபம்" என்று குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலத்தில் பலர் யூடியூப், டிஜிட்டல் கான்டென்ட், ஸ்டார்ட்அப் போன்ற சிக்கலான துறைகளில் இறங்குகிறார்கள்.

34
குறைந்த முதலீட்டு தொழில்

ஆனால் இதில் கடும் போட்டி, தொடர்ச்சியான அப்டேட்கள், கொள்கை மாற்றங்கள் போன்ற சவால்கள் அதிகம். உண்மையில் இந்தத் துறைகளில் இறங்கும் 80% பேருக்கு நிலையான வெற்றி கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாற்றாக, சில எளிய பிஸினஸ் ஐடியாக்கள் நல்ல வருமானத்தை தரக்கூடியவை. உதாரணமாக, லாண்ட்ரி சேவை இன்று நகர வாழ்க்கையில் மிகவும் தேவையான ஒன்று. சிறிய முதலீட்டில் தொடங்க முடியும். மேலும், சாலையோர டீ கடைகள் எப்போதும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும், நாள் முழுவதும் வருமானம் தரும் தொழிலாகும்.

44
வருமானம் தரும் சின்ன தொழில்கள்

மேலும், கார் வாஷிங் மற்றும் பார்க்கிங் சேவைகள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதிக வருமானம் தருகின்றன. நகரங்களில் வீடு மாற்றம் அதிகமாக இருப்பதால் பேக்கர்ஸ் & மூவர்ஸ், வேர்ஹவுஸ் சேவைகளும் நல்ல தேவைகளைப் பெற்றுள்ளன. முக்கியமான இடம் இருந்தால் ஏடிஎம் மெஷின்களுக்கு வாடகைக்கு கொடுத்து மாதாந்திர வருமானமும் பெறலாம். பிஸினஸ் என்பது பெருமைக்காக அல்ல, நிலையான வருமானத்திற்காக இருக்க வேண்டும். எளிமையானதாக இருந்தாலும் தொடர்ந்து பணம் வரும் இந்த "போரிங் பிசினஸ்" மாடல்கள், குறைந்த அழுத்தத்துடன் அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories