Health Insurance: ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

Published : Aug 28, 2026, 03:19 PM IST

Health Insurance: மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவக் காப்பீடு அவசர நேரத்தில் பெரிய செலவுச் சுமையை குறைக்க உதவும். ஆனால், அவை எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
ஹெல்த் இன்சூரன்ஸ்

பொதுவாக எல்லாருமே பிள்ளைகளோட படிப்பு, திருமணம், கார், வீடு வாங்குறது என எதிர்காலத்துக்காக முன்கூட்டியே பணத்தை சேமித்து வைக்கிறோம். ஆனால், மருத்துவச் செலவுக்காக தனியா சேமித்து வைக்கிறவங்க ரொம்பக் குறைவு. இதனால் திடீர்னு உடம்புக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கையில் பணம் இல்லாமல் நகையை அடகு வைக்கிறதோ, கடன் வாங்குறதோ என சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன? என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்.

மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவக் காப்பீடு (Health Insurance) அவசர நேரத்தில் பெரிய செலவுச் சுமையை குறைக்க உதவும். ஆனால் பாலிசி எடுத்துவிட்டால் எல்லா மருத்துவச் செலவுகளும் முழுமையாக கிடைத்துவிடுமா? பாலிசியின் விதிமுறைகள் என்ன? போன்றவற்றை முன்கூட்டியே கவனமாகச் சரிபார்ப்பது முக்கியம்.

27
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது, உங்கள் வயது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போதைய உடல்நிலை மற்றும் மருத்துவச் செலவுகளை கருத்தில் கொண்டு, போதுமான Sum Insured தொகையைத் தேர்வு செய்வது அவசியம். ஒவ்வொருவருக்கும் அடிப்படை காப்பீட்டுத் தொகையாக ரூ.15 முதல் ரூ.20 வரையிலாவது இருக்க வேண்டும்.

இதில் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு காப்பீடு இருக்கும். ஆனால், அது மட்டுமே போதும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் வேலையை இழக்கும் போது அந்த காப்பீடும் முடிந்துவிடும். இதனால் பாலிசியை வெளியில் எடுப்பது நல்லது.

37
Waiting Period என்ன?

சில ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு வரம்பு இருக்கலாம். அதேபோல, ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு (Pre-existing Diseases) சிகிச்சை பெற குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். IRDAI விதிகளின்படி PED waiting period அதிகபட்சம் 36 மாதங்கள் வரை இருக்கலாம். அதனால், இந்த Waiting Period எவ்வளவு காலம் என்பதை பாலிசி எடுப்பதற்கு முன்பே தெரிந்துக்கொள்ள வேண்டும்.

47
Network Hospitals எத்தனை?

உங்கள் பகுதியில் இருக்கும் முக்கியமான மருத்துவமனைகள் அந்த காப்பீட்டு நிறுவனத்தின் Network Hospitals பட்டியலில் இருக்கிறதா ? என்பதை பாலிசி எடுப்பதற்கு முன்பே செக் பண்ணிக்கோங்க. ஏனென்றால், அவசர நேரத்தில் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு போக வேண்டிய நிலை வந்தால் சிரமமாக இருக்கும். அதேபோல், இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைகளுடன் இணைந்து Cashless வசதி இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்.

57
Claim Data

Claim Settlement Ratio மட்டும் பார்க்காமல், பல ஆண்டுகளின் claim data, rejection காரணங்கள் மற்றும் customer service ஆகியவற்றையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், Claim Settlement Ratio அதிகமாக இருந்தால் நல்லது.

Room Rent Limit இருக்கிறதா?

சில ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் Hospital Room Rent-க்கு தினசரி வரம்பு இருக்கும். இதனால், மொத்தமாக கிடைக்கும் Claim தொகையிலும் பாதிப்பு ஏற்படலாம். முடிந்தவரை Room Rent Cap இல்லாத பாலிசியைத் தேர்வு செய்வது நல்லது.

Disease Sub-limit

கண்புரை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு தனி வரம்பு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.

Co-payment

பாலிசியில் Co-payment இருந்தால், மருத்துவச் செலவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நீங்களே செலுத்த வேண்டியிருக்கும். இதனால், முடிந்தவரை Zero Co-pay பாலிசியை ஒப்பிட்டு தேர்வு செய்வது நல்லது.

67
எதற்கெல்லாம் Claim கிடைக்கும்?

Policy exclusions-ஐ முழுமையாகப் படிக்க வேண்டும். Exclusions என்றால், இன்சூரன்ஸ் பாலிசியில் கவர் ஆகாத சிகிச்சைகள் மற்றும் மருத்துவச் செலவுகள். அதனால், பாலிசி எடுப்பதற்கு முன் எதுக்கெல்லாம் காப்பீடு கிடையாது என்பதை கட்டாயம் படித்து பார்க்க வேண்டும். பாலிசியில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட செலவுகளுக்கு மட்டுமே Claim கிடைக்கும்.

77
Premium மட்டும் பார்த்து தேர்வு செய்யாதீர்கள்

குறைந்த பிரீமியம் என்பதற்காக மட்டும் பாலிசியை தேர்வு செய்யாதீர்கள். Health Insurance வாங்கும்போது Premium எவ்வளவு என்பதைக் காட்டிலும், எவ்வளவு Coverage கிடைக்கிறது, எப்போது Claim செய்ய முடியும், என்னென்ன Cover ஆகாது, உங்கள் செலவில் எவ்வளவு பங்கு இருக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்து பாலிசி எடுப்பது முக்கியம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories