Confirm Train Ticket: தட்கல் டிக்கெட் முடிஞ்சிடுச்சா? ரயில் கிளம்பும் முன்பே காலி சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கு!

Published : Aug 28, 2026, 11:31 AM IST

Confirm Train Ticket: தட்கல் டிக்கெட் ஓபன் ஆன சில நிமிடங்களிலேயே எல்லா சீட்களும் புக் ஆகிவிட்டதா? அப்படியானால் உங்கள் ரயில் பயணம் அத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டியதில்லை.

PREV
16
தட்கல் டிக்கெட் கிடைக்கவில்லை

அவசர வேலையாக இருந்தாலும் சரி, ஜாலியாக டூர் செல்வதாக இருந்தாலும் சரி, நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் தான் நம்மில் பலரின் முதல் தேர்வு. ஆனால், இப்போதெல்லாம் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பே புக்கிங் திறக்கப்பட்டாலும், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

26
கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்

சுற்றுலா செல்வதற்கு மட்டுமல்ல, அவசரத் தேவைகளுக்காகவும் பலர் ரயிலில் பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தட்கல் டிக்கெட்டையே பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால், சமீபகாலமாக தட்கல் டிக்கெட்டுகளும் உடனடியாக 'ஆல் புக்' ஆகிவிடுகின்றன. இதுபோன்ற சமயங்களில், இந்த ட்ரிக்கை பின்பற்றினால் கடைசி நிமிடத்தில்கூட கன்ஃபார்ம் டிக்கெட் பெறலாம்.

36
கடைசி நேர ரயில் டிக்கெட்

தட்கல் கோட்டா முடிந்தால் பயண வாய்ப்பே முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். ரயில்வேயின் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம், இறுதிப் பட்டியல் (Chart) தயாரான பிறகும் நீங்கள் உறுதியான இருக்கையைப் பெறலாம். அது எப்படி என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். கடைசி நேரத்தில் கன்ஃபார்ம் டிக்கெட் பெறுவது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

46
ரயில் சார்ட் தயாரிப்பு

பொதுவாக, ரயில் கிளம்புவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன்பு இறுதிப் பயணப் பட்டியல் (Final Passenger Chart) தயாராகும். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நலக் குறைவு அல்லது அவசரத் தேவைகள் காரணமாகப் பலர் டிக்கெட்டுகளை ரத்து செய்வார்கள். சில சமயம், அரசு கோட்டா சீட்களும் காலியாக இருக்கும். இந்த சீட்களை எல்லாம் கடைசி நேரத்தில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் ஒதுக்கும். இனி டிக்கெட் புக் செய்யும்போது இந்த டிப்ஸை நினைவில் கொள்ளுங்கள்.

56
காலி ரயில் சீட்

எனவே, தட்கல் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். IRCTC செயலி அல்லது இணையதளத்தில் ஒரு கண் வைத்திருங்கள். ரயில் புறப்படுவதற்கு முன், 'Chart Vacancy' ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் ரயில் எண்ணை உள்ளி்ட்டால், எத்தனை சீட்கள் காலியாக உள்ளன என்பது தெரியும். இதில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது, கிடைத்தால் அது கன்ஃபார்ம் டிக்கெட்தான்.

66
ரயில் டிக்கெட் புக்கிங்

இந்த முழு செயல்முறையும் இருக்கைகள் கிடைப்பதைப் பொறுத்தது. எனவே, தட்கல் விண்டோ மூடப்பட்ட பிறகும் நம்பிக்கையை இழக்காமல், சார்ட் தயாரான பிறகு ஒருமுறை காலியான சீட் இருக்கிறதா என்று பாருங்கள். இந்த ட்ரிக்கை பின்பற்றினால், கடைசி நேரத்தில் உங்களுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இனி டிக்கெட் கிடைக்கவில்லை என்று சோர்ந்து போகாதீர்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories