தாறுமாறு எகிறும் தக்காளி.. இன்று மேலும் 30 ரூபாய் உயர்வு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

First Published Jul 8, 2023, 11:16 AM IST

நேற்று 90 ரூபாய் வரை விற்பனையான தக்காளி இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து ஒரு கிலோ ரூ.120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருவது தக்காளி விலை.  இது சமையலுக்கு மிக மிக அத்தியாவசியமான பொருளாகும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தக்காளி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;-  Today Gold Rate in Chennai : இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், தமிழக அரசு பண்ணை பசுமை கடை, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனை செய்யப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன. 

தக்காளி வரத்து அதிகரித்ததால் நேற்று தக்காளி விலை 40 ரூபாய் குறைந்து கிலோ ரூ. 130க்கு விற்கப்பட்ட தக்காளி 80, 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த சந்தோஷம் ஒரே நாள் மட்டுமே நீடித்தது. இன்று தக்காளி ஒரு கிலோ ரூ.30 உயர்ந்துள்ளது. 

இந்நிலையில்,  நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.30 உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தக்காளி விலை குறைந்ததால் சற்று மகிழ்ச்சியில் இருந்த பொதுமக்கள் இன்று ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று பவர் கட்! எத்தனை மணிநேரம் தெரியுமா?

click me!