Today Gold Rate in Chennai: நெருங்கும் தீபாவளி! தலைகீழாக மாறிய தங்கம் விலை! அப்படி என்ன மாற்றம் பாக்குறீங்களா?

Published : Oct 22, 2024, 01:23 PM ISTUpdated : Oct 22, 2024, 01:30 PM IST

Today Gold Rate In Chennai: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றைய 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.58,400 ஆகவும், கிராம் ரூ.7,300 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ரூ.110க்கு விற்பனையாகிறது.

PREV
16
Today Gold Rate in Chennai: நெருங்கும் தீபாவளி! தலைகீழாக மாறிய தங்கம் விலை! அப்படி என்ன மாற்றம் பாக்குறீங்களா?
Gold Rate

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

26
Chennai Gold Rate

இந்நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போற போக்கை பார்த்தால் தங்கம் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. 

இதையும் படிங்க: School Holiday: தீபாவளிக்கு 4 இல்ல 5 நாட்கள் விடுமுறை! அரசின் அறிவிப்பால் குஷியில் பள்ளி மாணவர்கள்!

36
Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனையானது. 

46
Today Gold Rate

இன்றைய (அக்டோபர் 22) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.58,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,300-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,755-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.62,040-ஆக விற்பனையாகிறது. 

இதையும் படிங்க:  Government Employee:தீபாவளி அதுவுமா மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு குட்நியூஸ்! ஒரே நேரத்தில் இரண்டு சம்பளம்

56
Silver Rate

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

66
Diwali Gold Rate

தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ரூ.58,000க்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!

Recommended Stories