வீட்டில் இருந்தே ரூ.66,000 சம்பாதிங்க! சூப்பர் ஹிட்டான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

First Published | Oct 22, 2024, 11:21 AM IST

Post Office Monthly Income Scheme: போஸ்ட் ஆபிஸ் மாத வருமானத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்வடையும். இத்திட்டத்தின் கீழ் தனியாகவோ கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் 7.4% வருடாந்திர வட்டி கிடைக்கும்.

Post Office Monthly Income Scheme

பெரும்பாலான சிறுசேமிப்புத் திட்டங்களில், முதலீடு செய்த பணத்திற்கான பலன் கிடைக்க முதிர்வுக் காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், ஒருமுறை பணத்தை முதலீடு செய்து, மாதந்தோறும் வருமானம் வந்துகொண்டே இருக்கும் திட்டம் இருந்தால் எப்படி இருக்கும்?

Post Office MIS investment

போஸ்ட் ஆபிஸில் அப்படி ஒரு திட்டம் இருக்கிறது. அதுதான் போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம். இந்த ரிஸ்க் இல்லாத முதலீட்டில் வருமானத்திற்கு உத்தரவாதம் உள்ளது. போஸ்ட் ஆபிஸ் மாத வருமான திட்டத்தில் ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் தனிநபர் மற்றும் கூட்டுக் கணக்கு தொடங்கலாம். ஜனவரி 1, 2024 முதல், இத்திட்டத்துக்கு 7.4% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.

Tap to resize

Monthly Income Scheme

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், நீங்கள் தனிநபர் கணக்கு தொடங்கினால், ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். முதலீடு செய்த அசல் தொகை 5 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு திருப்பித் தரப்படும். இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Post Office Savings Scheme

ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகு, முதலீடு செய்த அசல் தொகையை எடுக்க அல்லது திட்டத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்குக் கிடைக்கும் வட்டி உங்கள் சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படும்.

Post Office Monthly Income Scheme interest rate

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஒரு கணக்கைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதம். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.5,550 வருமானம் கிடைக்கும். 12 மாதங்களில் ரூ.66,600 வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுகளில் வட்டி மூலம் ரூ.3.33 லட்சம் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

Post Office Monthly Income Scheme maturity

இத்திட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கு தொடங்கலாம். கூட்டுக் கணக்கில் கிடைக்கும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும். கூட்டுக் கணக்கை எந்த நேரத்திலும் ஒரே கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கை கூட்டுக் கணக்காகவும் மாற்றலாம். கணக்கில் இதுபோன்ற மாற்றம் செய்ய, அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கிய கணக்கை முன்கூட்டியே மூடவும் முடியும்.

POMIS benefits

போஸ்ட் ஆபிஸ் மாத வருமானத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்தப்படுகிறது. எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தில் (POMIS) முதலீடு செய்யலாம்.

POMIS account

போஸ்ட் ஆபிஸ் மாத வருமானத் திட்டத்தில் கணக்கு ஆரம்பிக்க, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சான்றாக அளிக்க வேண்டும். 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரிச் சான்று ஆகியவையும் தேவை. இத்துடன் கணக்கு தொடங்குவதற்கான படிவத்தையும் நிரப்பி அளிக்க வேண்டும். நாமினி விவரங்களைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

Latest Videos

click me!