Diwali Bank Holidays
தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி விடுமுறை தேதியை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தீபாவளி அக்டோபர் 31, 2024 அன்று கொண்டாடப்படும். இருப்பினும், நவம்பர் 1, 2024 அன்று அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 3, 2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
Bank Holidays 2024
வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் நலன் கருதி நவம்பர் 1 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, நவம்பர் 9, 2024 அன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் வேலை செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Holidays
பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் வங்கி விடுமுறை விடப்படுமா? அல்லது விடுமுறை நாட்களில் வங்கி செயல்படுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. தீபாவளி இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள இந்து சமூகத்தினரிடையேயும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது பல பிராந்தியங்களில் ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Diwali Holiday
டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களில், தீபாவளி அதே நாளில் கொண்டாடப்படும், மேலும் சில கூடுதல் பிராந்திய விடுமுறைகள் நவம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும். இது தவிர, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பொதுவாக வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுள்ளது.