மாதம் ரூ.5000 சேமித்தால் ரூ.50 லட்சம் கிடைக்கும்! லாபத்தை அள்ளித் தரும் SIP முதலீடு!

Published : Oct 22, 2024, 09:02 AM IST

SIP முறையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்து, 12% வளர்ச்சி விகிதம் கிடைப்பதாகக் கொண்டால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் ரூ.12 லட்சம் உங்களின் முதலீடாக இருக்கும், மீதமுள்ளவை லாபமாக இருக்கும்.

PREV
16
மாதம் ரூ.5000 சேமித்தால் ரூ.50 லட்சம் கிடைக்கும்! லாபத்தை அள்ளித் தரும் SIP முதலீடு!
SIP investment for Rs.5000

சேமிப்பைத் தொடங்குவதற்கு முன்பே ஒரு குறிப்பிட்ட இலக்கை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்குத் தொகையை மனதில் கொண்டு தொடர்ந்து சேமிக்க வேண்டும்.

வருமானம் கிடைத்தவுடன் ஒரு தொகையை சேமிப்புக்கு ஒதுக்குவதை ஒரு கொள்கையாகப் பின்பற்றுவது அவசியம். பலர் தங்கள் வருமானத்தில் முதலில் செலவுகளை எல்லாம் முடித்துவிட்டு, எஞ்சியதை முதலீடு செய்ய முயல்கிறார்கள். நிதி இலக்குகளை அடைவதற்கு, செலவுகளுக்கு முன் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிப்பதுதான் முக்கியம்.

26
Systematic Investment Plan

உதாரணமாக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் ரூ. 5,000 சேமித்து , 12 சதவீத வளர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோராயமாக ரூ. 50 லட்சம் கிடைக்கும். இந்த மொத்தத் தொகையில் ரூ.12 லட்சம் உங்களின் ஆரம்ப முதலீடாக இருக்கும். மீதமுள்ளவை லாபமாக இருக்கும். மாதாந்திர சேமிப்பை ரூ.10,000 ஆக உயர்த்தினால், இறுதியில் கிடைக்கும் தொகை கிட்டத்தட்ட ரூ.1 கோடியை எட்டும்.

36
SIP investment

SIP திட்டத்தில்,25 ஆண்டுகளுக்கும் மேலாக, மாதந்தோறும் ரூ. 5,000 முதலீடு செய்து, 12 சதவீத வளர்ச்சி விகிதம் இருந்தால், ரூ. 95 லட்சம் கிடைக்கும். இதுவே 10,000 ரூபாயை இதேபோல முதலீடு செய்தால், ரூ.1.9 கோடி வருமானம் கிடைக்கும். இதேபோல 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ. 1 கோடியைத் தாண்டிவிடும்.

46
SIP Calculator

எந்தவொரு முதலீட்டையும் தொடங்குவதற்கு முன், நிதி இலக்குகளை அடைவதற்கான காலக்கெடுவை கருத்தில் கொள்வது முக்கியம். கூடவே பணவீக்கத்தின் தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, 20 ஆண்டுகளில் உங்கள் குழந்தையின் கல்விக்கு ரூ.25 லட்சம் தேவைப்பட்டால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக்குத் தேவையான தொகை ரூ.35 லட்சமாக அதிகரிக்கலாம்.

56
How To Invest In SIP

SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துவது, நிதி இலக்குகளை எட்டுவதற்குத் தேவையான முதலீட்டைத் தீர்மானிக்க உதவும். மேலும், இலக்கை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப முதலீட்டைச் சரிசெய்யலாம். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்டும் அளவு கணிசமான வருமானத்தை வழங்கும்.

66
Mutual Funds

2-3 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP முதலீட்டைத் தொடங்கலாம் என வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஃபண்டுகள் பல்வேறு சந்தை மூலதனம் மற்றும் துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டதாக இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

ஏற்கனவே அவ்வாறு செய்யவில்லை என்றால் நீண்டகால இலக்குகளை உருவாக்கிக்கொண்டு சேமிப்பைத் தொடங்குவது நல்லது. முதலீட்டைத் தொடங்க தாமதப்படுத்தினால், இலக்குகளை அடைய அதிக முதலீடு தேவைப்படும். சேமிப்பை முன்கூட்டியே தொடங்குவதன் மூலம், ஒரு சிறிய தொகையைத் தொடர்ந்து சேமித்து, முதிர்வுக் காலத்தில் பெரிய தொகையைப் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories