இந்தியாவின் டாப் 10 பணக்கார ஃபேமிலி - அவங்க குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 21, 2024, 11:02 PM IST

Top 10 Business Man of India : அம்பானி முதல் முருகப்பா குரூப்ஸ் வரை இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்கார குடும்பங்களை பற்றி அவர்களுடைய சொத்து மதிப்பு பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

Ambani Family

இந்தியாவை பொறுத்தவரை முதலிடத்தில் இருப்பது அம்பானி அவர்களின் குடும்பம் தான். அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுடையது தான் "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்". இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அரசு வழங்கும் வட்டியில்லா லட்சக்கணக்கான ரூபாய் கடன்.. பெறுவது எப்படி?

Bajaj Family

இந்தியாவைப் பொறுத்தவரை ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவில் சாதித்து வரும் குடும்பம் தான் பஜாஜ். அதே நேரம் ஆட்டோமொபைல் மட்டுமல்லாமல் பல விதமான தொழில்களை இந்த குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய சொத்து மதிப்பு சுமார் 7.12 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

Tap to resize

Birla Family

இந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான குடும்பம் தான் பிர்லா குடும்பம். ஆதித்யா பிர்லா குரூப்ஸ் பற்றி தெரியாதவர்களே இந்தியாவில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய புகழோடு இந்தியாவில் வாழ்ந்து வருபவர்கள் இவர்கள். இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு இன்றைய தேதியில் சுமார் 5.38 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Jindal Family

JSW Steels பற்றி நாம் பலரும் கேள்விப்பட்டிருப்போம். அந்த நிறுவனத்தை நிர்வகித்து வருபவர்கள் தான் ஜிண்டால் குடும்பம். பல தலைமுறைகளாக பெரும் பணக்காரர்களாக இந்தியாவில் வாழ்ந்தவரும் இவர்களுடைய குடும்பத்தில் சொத்து மதிப்பு சுமார் 4.71 லட்சம் கோடி ரூபாய்.

Shiv Nadar Family

உலக அளவில் புகழ்பெற்றது தான் HCL Tech நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் தான் சிவ் நாடார். இந்த மென்பொருள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 4.3 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. HCL  நிறுவனம் உலக அளவில் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

Mahindra Family

பஜாஜ் நிறுவனத்தைப் போல இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் சாதிக்கும் மற்றொரு குடும்பம் தான் மகேந்திரா குடும்பம் ஆட்டோமொபைலை தவிர பிற தொழில்களில் இவர்கள் பெரிய அளவில் ஈடுபடவில்லை என்றாலும் இந்திய அளவில் இயந்திரத்துறையில் பெரிய அளவில் புகழ்பெற்றவர்கள். இவர்களிடம் சுமார் 3.45 லட்சம் கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.

Dani Asian Paints

இந்தியா மட்டுமல்ல தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர்தான் ஏசியன் பெயிண்ட்ஸ். டேனி என்பவருடைய நிறுவனம் தான் இது, டேனி குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.71 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Wipro

உலக அளவில் புகழ்பெற்ற மற்றொரு மென்பொருள் நிறுவனம் தான் விப்ரோ. இந்த நிறுவனம் பிரேம்ஜி குடும்பத்தை சேர்ந்தது. மிகப் பெரிய இந்திய பணக்காரர்களின் இவர்களும் ஒருவர். இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Rajiv Singh

உலக அளவில் புகழ்பெற்ற டிஎல்எப் நிறுவனம் குறித்து நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ராஜீவ் சிங் குடும்பத்தை சேர்ந்தது தான் இந்த டிஎல்எப். இவர்களுடைய சொத்து மதிப்பு சுமார் 2.04 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Murugappa Family

டியூப் இன்வெஸ்ட்மெண்ட் ஆப் இந்தியா அல்லது முருகப்பா குடும்பம் என்றால் தமிழகத்திலும் கூட அனைவருக்கும் தெரியும் இந்திய அளவில் பைப் உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்ற நிறுவனம். இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.2 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வரும் மாற்றம்.. அனைவரும் எதிர்பார்த்த குட் நியூஸ் எப்போது?

Latest Videos

click me!