மாதம் 1,500 டெபாசிட்டுக்கு ரூ.35 லட்சம் வரை கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

First Published | Oct 22, 2024, 12:16 PM IST

போஸ்ட் ஆபிஸ் மூலம் செயல்படுத்தப்படும் கிராம் சுரக்‌ஷா யோஜனா ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1500 டெபாசிட் செய்தால், வருங்காலத்தில் 31 முதல் 35 லட்சம் வரை பலன் கிடைக்கும்.

post office

பெரும்பாலான மக்கள் வசதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள். அதற்கு கவனமான நிதி திட்டமிடல் தேவைப்படுகிறது. பொருளாதார சமநிலையை பேணுவதும் சவாலாக உள்ளது. இதனால், பலர் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறார்கள். பணத்துக்கான பாதுகாப்புடன் அதிக வருமானயும் எதிர்பார்க்கிறார்கள்.

தபால் துறையில் சேமிப்பு

போஸ்ட ஆபிஸ் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கிராம் சுரக்‌ஷா யோஜனா. இது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகும். பொதுவாக அனைவரும் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டம். குறைந்த ரிஸ்க்குடன் நல்ல வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது.

Tap to resize

வைப்பு நிதி

இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.1500 டெபாசிட் செய்தால், வருங்காலத்தில் 31 முதல் 35 லட்சம் வரை பலன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 19 வயது ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை இதில் முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000. அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கு மாதம்தோறும் பிரீமியம் செலுத்தலாம். காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தும் ஆப்ஷனும் உள்ளது. இந்த பாலிசி எடுத்தவர்கள் போஸ்ட் ஆபிஸில் கடனும் பெற முடியும்.

ஒருவர் 19 வயதில் இத்திட்டத்தில் முதலீடு செய்து ரூ.10 லட்சம் பாலிசி வாங்குகிறார் என்றால், 55 ஆண்டுகளுக்கு அவருடைய மாதாந்திர பிரீமியம் ரூ.1515 ஆக இருக்கும். இதுவே 58 ஆண்டுகளுக்கு ரூ.1463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1411 ஆகவும் இருக்கும். 55 வருட பாலிசிக்கு ரூ.31.60 லட்சமும், 58 வருட பாலிசிக்கு ரூ.33.40 லட்சமும், 60 வருட பாலிசிக்கு ரூ.34.60 லட்சமும் முதிர்வுத் தொகை கிடைக்கும்.

Latest Videos

click me!