மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் சரிவை சந்தித்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415-க்கு விற்பனையானது.
இன்றைய (ஜூலை30) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,840-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.54,720-ஆக விற்பனையாகிறது.
44
Today Silver Rate
வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.