எஸ்கேப் மூடில் மக்கள்.. தங்கப் பத்திரத் திட்டத்தை தலை முழுகும் மத்திய அரசு.. அப்போ இதுதான் காரணமா?

First Published | Jul 30, 2024, 9:31 AM IST

தற்போது மத்திய அரசு இறையாண்மை தங்கப் பத்திரங்கள் எனப்படும் தங்க பத்திர திட்டத்தை நிறுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Sovereign Gold Bond Discontinue

கடந்த 2015 ஆம் ஆண்டு தங்கத்தைப் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் அரசால் தங்கப் பத்திரத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. தங்கத்தை பொருளாக வைத்திருப்பதற்கு மாற்றாக தங்கப் பத்திரங்களாக வைத்துக் கொள்ள இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள் தங்கத்தை ஒரு பொருளாக வாங்கி  வீட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக, அரசின் தங்க  பத்திரங்களாக வாங்கிக் கொள்ளலாம்.

SGB

999 தூய்மையான தங்கத்தின் முடிவு விலையாக இந்தியா புல்லியன் அன்ட் ஜுவல்லர்ஸ் அஸோஸியேஷன் லிமிடெட் IBJA, முந்தைய வாரத்தில் வெளியிட்ட விலையின் சராசரி, தங்கப் பத்திரத்தின் தங்க மதிப்பீட்டு விலையாக நிர்ணயிக்கப்படும். இந்த பத்திரத்தின் முதலீட்டுத் தொகையில், 2.75 விழுக்காடு நிலையான வட்டி வழங்கப்படுகிறது.

Latest Videos


Sovereign Gold Bond Scheme

இந்த திட்டத்தின் நன்மைகள் கருதி இந்தியர்கள் பலரும் இந்த தங்க பத்திர திட்டத்தில் சேர்ந்தனர். தற்போது மத்திய பட்ஜெட் 2024 அறிவிப்புக்கு பிறகு, தங்க பத்திர திட்டம் மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் காரணமாக தங்க பத்திர திட்டம் நல்ல லாபத்தை கொடுக்காது என்பதை அறிந்து பலரும் இந்த திட்டத்தில் இருந்து தற்போது அபரிவிதமாக விலகி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sovereign Gold Bond

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, மத்திய அரசாங்கம் சவரன் தங்கப் பத்திரங்கள் (SGB) திட்டத்தை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதற்கான யூனியன் பட்ஜெட்டின் முடிவுடன் இந்த மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது.

Union Budget 2024

குறைந்த சுங்க வரியானது இறையாண்மை தங்கப் பத்திரங்களுக்கான தேவையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, வரிக் குறைப்புக்குப் பிறகு, தேசிய பங்குச் சந்தையில் SGB விலைகள் 2-5 சதவிகிதம் குறைந்தன. முன்னதாக, தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டது.

Gold Investment

இதில் 10 சதவீத அடிப்படை சுங்க வரி மற்றும் 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் ஆகியவை அடங்கும். இந்த வரிக் குறைப்பால் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4,000க்கு மேல் குறைந்து ரூ.68,900 ஆக உள்ளது.

Central Government

இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) எஸ்ஜிபி விலை 2-5 சதவீதம் குறைந்துள்ளது. உதாரணமாக, SGBAUG24 2.6 சதவீதம் சரிந்து ஒரு யூனிட்டுக்கு ரூ. 7,275 ஆக இருந்தது. அதே நேரத்தில் SGBDEC2513 இல் மிகவும் கணிசமான வீழ்ச்சி காணப்பட்டது, இது 5.98 சதவீதம் குறைந்து ரூ.7,550 ஆக இருந்தது.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!