Petrol Diesel Price in Chennai Today : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

First Published | Jul 30, 2024, 6:38 AM IST

எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய நிலவலரத்தை இங்கே காணலாம்.

Petrol Diesel

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

Petrol Diesel Price

இதையடுத்து, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 134 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Tap to resize

Petrol Diesel Price in Chennai

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 135வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் குறையும் என்ற எதிர்ப்பார்பில் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர். 

Latest Videos

click me!