Data Plan | 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5ஜிபி டேட்டா! யார் பெஸ்ட் தெரியுமா?

First Published | Jul 29, 2024, 12:20 PM IST

84 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குவதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் அல்லது VI, யார் சிறந்த திட்டத்தை வழங்குகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.
 

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ(வோடபோன்) ஆகிய மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இருப்பினும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இன்னுமும் பழைய கட்டணத்தில் திட்டங்களை வழங்கி வருறது.

தொலைதொடர்பு நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் ப்ரீபெய்டு திட்டங்களை இங்கே ஒப்பிட்டுப் பார்த்து, கம்மி விலையில் அதிக சேவையை வழங்கும் நிறுவனம் எது என்பதை இங்கே பார்க்க போகிறோம்.

ரிலையன்ஸ் ஜியோ!

ஜியோ ரூ.799 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 126ஜிபி டேட்டா வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டா கிடையாது.

ஜியோ அதே நன்மைகளுடன் ரூ.889லும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது, தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ், மொத்தம் 126ஜிபி டேட்டா. கூடுதல் சலுகைகளில் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமாவுக்கான அணுகலுடன் ஜியோ சாவன் ப்ரோவும் அடங்கும். இந்த திட்டத்திலும் வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்காது.

ITR Filing |இதுவரையில் 5 கோடிக்கும் மேல் வரித்தாக்கல்! நெருங்கி வரும் காலக்கெடு! ஸ்தம்பிக்கும் போர்ட்டல்!
 

Latest Videos


ஏர்டெல்

ஏர்டெல் 84 நாட்கள் வேலிடிட்டக்கு ரூ.859க்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்க அனுமதிக்கிறது. கூடுதல் சேவைகளாக அப்பல்லோ 24/7, இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் இலவச வின்க் மியூசிக் வழங்குகிறது.
 

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா ரூ.859 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இதில் 84 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, இந்த திட்டம் மூன்று நாட்களுக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delight ஆகியவை கூடுதல் அம்சங்களாக கிடைக்கின்றன.

இனி ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.9250 வட்டி கிடைக்கும்.. நீங்க இதை மட்டும் பண்ணா போதும்..
 

BSNL

பிஎஸ்என்எல் ரூ.485க்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, ஆனால் இது 84 நாட்களுக்குப் பதிலாக 82 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் என எதுவும் இல்லை.

மேற்கண்ட நான்கு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில், BSNL கூடுதல் நன்மைகள் இல்லாவிட்டாலும், மலிவான விலையில் 82 நாட்களுக்கான திட்டத்தை வழங்குகிறது. கூடுதல் சலுகைகளைப் பொறுத்தவரை, வோடபோன் ஐடியாவின் திட்டம் சிறந்ததாக விளங்குகிறது.

click me!