
பொதுவாக ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தங்களுக்கான பொருளாதார தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் பலரின் விருப்பமாக உள்ளது. இதற்காக மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு ஓய்வூதிய திட்டங்களையும், பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக வட்டி விகிதம்
ஃபிக்சட் டெபாசி, ஆர்.டி, போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஃபிக்சட் டெபாசிட்களில் பொது மக்களை விட மூத்த குடிமக்களுக்கு 0.25% 0.75% வரை அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது. அதிக வட்டி வழங்கப்படுவதால் மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பின் மூலம் அதிக வருமானத்தையும் பெற முடியும். ஓய்வு காலத்தில் கூடுதல் வருமானத்தை பெறும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பழைய மற்றும் புதிய வரி முறை.. ரூ. 8 லட்சத்துக்கு மேல் சம்பளம் மற்றும் அதற்கு மேல்? என்ன செய்யலாம்?
வரி சலுகைகள் :
சேமிப்பு திட்டங்களில் மட்டுமின்றி மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது 60 வயது முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சம் வரையில் வரி விலக்கு பெறலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு பெற முடியும். மேலும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் குறிப்பிட்ட திட்டங்களின் முதலீட்டுக்கு ரூ.50000 வரை டிடெக்ஷன் பெற முடியும்.
டோர் ஸ்டெப் வங்கி வசதிகள்
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் பணம் அல்லது காசோலை மற்றும் டிமாண்ட் டிராப்ட்களை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 70 அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு KYC, ரொக்க வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான விதிகளை ரிசவ வங்கி வகுத்துள்ளது. நீங்கள் வாடிக்கையாளர் சேவை எண்ணை டயல் செய்தால் போதும், உங்கள் வீட்டிற்கே வந்து சலுகைகளை வழங்க வங்கிகள் உதவும்.
ஓய்வூதிய திட்டங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) போன்ற பிரத்தியேக ய்வூதியத் திட்டங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தத் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானத்தை வழங்குவதோடு அவர்களின் அன்றாடச் செலவுகளை நிர்வகிக்கவும் உதவுகின்றன.
மருத்துவ காப்பீடு
மூத்த குடிமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு வழக்கமான மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல சுகாதார காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் விரிவான கவரேஜை வழங்குவதுடன் மருத்துவ அவசர காலங்களில் நிதி உதவி வழங்குகின்றன.
தங்க நகையை வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.. இல்லைனா நஷ்டம் உங்களுக்குதான்!
பொது போக்குவரத்து
பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பல மாநிலங்களிலும் சலுகைக் கட்டணங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது பயண கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மூத்த குடிமக்கள் போக்குவரத்துச் செலவில் பணத்தைச் சேமிக்க உதவுகிறது.
சொத்து வரியிலிருந்து விலக்கு
இந்தியாவின் சில மாநிலங்கள் மூத்த குடிமக்களுக்கு சொத்து வரி விலக்கு அளிக்கின்றன. இந்த விலக்கு சொத்து வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கலாம்.