தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையே நீடித்தது. சவரன் ரூ.43,840க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5,480க்கு விற்பனையானது.
இன்றைய (ஆகஸ்ட் 29) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.5,500ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,970ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,760ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.