இந்த மாதம் TNEB கரண்ட் பில் திடீரென அதிகமாக வந்திருந்தால் பதட்டப்பட வேண்டாம். திடீரென மின்சார கட்டணம் அதிகரித்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.
மாதம்தோறும் ஒரே அளவுக்கு வந்து கொண்டிருந்த மின்சார கட்டணம் ((TANGEDCO) அதாவது கரண்ட் பில் இந்த மாசம் மட்டும் திடீரென அதிகமாக வந்தால், பலருக்கும் உடனே “ஏதாவது தவறு நடந்துடுச்சா?” என்ற சந்தேகம் வரும். குறிப்பாக வீட்டில் பெரிய மாற்றமில்லை, ஈசி அதிகமாக ஓடல, கூடுதல் ஆட்களும் தங்கல என்று நினைக்கும்போது பில் உயர்வு இன்னும் அதிகமாக ஷாக் தரும். ஆனால் இந்த மாதிரி சூழ்நிலையில் பதட்டப்படாமல், ஒரு முறை சில விஷயங்களைச் சரிபார்த்தால் “பில் ஏன் உயர்ந்தது?” என்பதற்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இது உண்மையான காரணமாகவும் இருக்கலாம். அல்லது மீட்டர் ரீடிங் தவறு, பில்லிங் காலம் மாறுதல், நிலுவை தொகை சேர்த்துக் காட்டுதல் போன்ற காரணங்களாலும் மாறுபடலாம்.
25
மின் கட்டணம் உயர்வு காரணம்
முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், பில்லில் இருக்கும் விவரங்களை கவனமாகப் பார்ப்பது. குறிப்பாக நுகர்வோர் எண், பில்லிங் காலம், முந்தைய வாசிப்பு, தற்போதைய வாசிப்பு, நுகரப்படும் அலகுகள் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். சில சமயம் 2 மாத யூனிட்கள் சேர்ந்து கணக்கிடப்பட்டால், “இந்த மாசம் மட்டும் அதிகம்” என்று தோன்றும். அதேபோல பில்லில் முந்தைய இருப்பு/பாக்கிகள் என ஏதேனும் நிலுவை தொகை இருக்கிறதா என்று பார்க்கவும். கடந்த மாதங்களில் கட்டணம் செலுத்துவதில் தவறினால் அது சேர்ந்து இந்த மாதம் அதிகமாக காட்டப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் வீட்டின் மின் இணைப்பு வகை சரியாக இருக்கிறதா என்பது முக்கியம். தவறான கட்டண வகை போடப்பட்டிருந்தாலும் கட்டணம் அதிகரிக்கும்.
35
மின்சார சாதனங்களை கவனியுங்கள்
அடுத்து “வீட்டில் இவ்வளவு யூனிட் எப்படிப் போனது?” என்று உங்களுக்குள் நீங்களே கேள்வி கேளுங்கள். சிறிய மாற்றங்களே பெரிய கணக்காக மாறும். கோடை, ஈரப்பதம் அதிகமான நாட்களில் ஏசி, கூலர், ஃபேன் பயன்பாடு கூடும். அதுபோல கீசர் சில நேரம் அதிகமாகச் செலவாகும் சாதனம் ஆகும். தேவையில்லாமல் நீண்ட நேரம் ஆனில் வைத்தால் யூனிட்கள் வேகமாக ஏறும். பழைய ஃப்ரிட்ஜ், மோட்டார், இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜிங் போன்றவை சரியாக செயல்படாமல் இருந்தால் கூட உபயோகம் தெரியாமல் அதிகரிக்கலாம். வீட்டில் சமீபத்தில் புதிதாக வாங்கிய எலக்ட்ரானிக் சாதனம் ஏதாவது இருக்கிறதா, அல்லது வேலை காரணமாக வீட்டில் அதிக நேரம் இருப்பதால் நேரம் அதிகரித்ததா என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பில் உயர்வில் பெரிய சந்தேகம் இருந்தால், மீட்டர் ரீடிங் சரியா இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் வீட்டின் மின் மீட்டரில் தற்போது காட்டப்படும் ரீடிங்-ஐ மொபைல் கேமராவில் தெளிவாக ஒரு புகைப்படம் எடுக்கவும். அதை பில்லில் குறிப்பிடப்பட்ட “தற்போதைய ரீடிங்” உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டும் பொருந்தவில்லை என்றால், ரீடிங் தவறு இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் ஒரு சுலபமான சோதனை. வீட்டில் முடிந்தவரை அனைத்து சாதனங்களையும் ஆஃப் செய்து, மீட்டர் தொடர்ந்து யூனிட்கள் பதிவு செய்ததா என்பதை கவனியுங்கள். எதுவுமே பயன்படுத்தாத நேரத்திலும் யூனிட்கள் ஓடினால் வயரிங் கசிவு அல்லது மீட்டர் பிரச்சனை இருக்கலாம். இப்படியான ஆதாரங்கள் இருந்தால், புகைப்படத்துடன் புகார் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க எளிதானது.
55
மின் கட்டண சேமிப்பு டிப்ஸ்
இறுதியாக, சந்தேகம் உறுதியாக இருந்தால் TNEB-க்கு புகார் பதிவு செய்வது தான் சரியான தீர்வு. “பில் அதிகமா வந்திருக்கு” என்று மட்டும் சொல்லாமல், கடந்த பில், தற்போதைய பில், மீட்டர் ரீடிங் புகைப்படம் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். இது அதிகாரிகளுக்கு சிக்கலை விரைவாகப் புரிய உதவும். அதே சமயம், இனிமேல் பில் அதிகம் வராமல் இருக்க சில எளிய பழக்கங்களும் உதவும். LED பல்புகள் பயன்படுத்துதல், கீசரை தேவையான நேரம் மட்டும் செய்தல், மோட்டாரை நிரந்தர நேரத்தில் இயக்குதல், standby mode-ல் இருக்கும் சாதனங்களை plug level-l off செய்வது போன்றவை. ஒரு முறை முறையாக சரிபார்த்து சரியான நடவடிக்கை எடுத்தால், உங்கள் பணச் செலவையும் குறைக்க முடியும், மன அழுத்தமும் குறையும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.